Published : 19 Aug 2016 08:45 AM
Last Updated : 19 Aug 2016 08:45 AM

நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

இம்மாத இறுதிக்குள் சம்பா பயிருக் குத் தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் கிடைக்கப் பெறாவிட் டால், நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்ய சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேரவையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இது தொடர்பாக பேரவையில் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையிலும், குறைவான மழை மற்றும் நமக்குத் தேவையான அளவு தண்ணீர் மேட்டூர் அணையில் கிடைக்கப் பெறாத சூழ்நிலையிலும், டெல்டா விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், சம்பா சாகுபடிக்கென ஒரு சிறப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்தும்.

இம்மாத இறுதிக்குள் சம்பா பயிருக்குத் தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் கிடைக்கப் பெறாவிட்டால், நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி மேற்கொள்ள ஒரு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி, விவசாயிகள் நெல் விதைப்பு செய்ய தரிசு உழவுப் பணிகளுக்கு ஏக்கருக்கு ரூ.500 மானியம், தரமான சான்று பெற்ற விதைகளுக்கு கிலோவுக்கு 10 ரூபாய் மானியம், இயந்திரம் மூலம் நெல் விதைப்பு செய்ய ஏக்கருக்கு ரூ.600 மானியம், களைக்கொல்லி மருந்து தெளிக்க ஏக்கருக்கு ரூ.280 மானியம், இயந்திரம் மூலம் நடவு செய்யும் இடங்களில் ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் மானியம், துத்தநாகச் சத்து குறைபாடுள்ள வயல்களில், துத்தநாக சல்பேட் பயன்படுத்த ஏக்கருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும். மொத்தத்தில், சம்பா சாகுபடிக்காக ரூ.64 கோடியே 30 லட்சம் வழங்கப்படும்.

கர்நாடக அரசு மேகேதாட்டு அணை திட்டத்தை நிறைவேற்றப் போவதாக அம்மாநில முதல்வர் சுதந்திர தின உரையில் தெரி வித்திருப்பது டெல்டா விவசாயி களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக கடந்த சட்டமன்றத்தில் அரசின் 2 தனித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உச்ச நீதி மன்றத்தில் இடைக்கால மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மீறும் வகையிலும், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமலும் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த உத்தேசித்தால், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, சட்டப் பூர்வமான அனைத்து நடவடிக்கை களையும் அரசு மேற்கொள்ளும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x