Published : 30 Jun 2016 07:50 PM
Last Updated : 30 Jun 2016 07:50 PM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு

சென்னையில் தங்கம் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.23 ஆயிரத்து 224க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குசந்தை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் இன்று சிறிய அளவில் குறைந்திருந்தது.

இதனால், சென்னையில் வியாழக்கிழமை 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.96 குறைந்து ரூ.23 ஆயிரத்து 224க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 903க்கு விற்கப்பட்டது. இதுவே, புதன்கிழமை ரூ.2 ஆயிரத்து 915க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x