Published : 14 Jan 2017 10:42 AM
Last Updated : 14 Jan 2017 10:42 AM

முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த யுனைடெட் இந்தியா நிறுவனம் தேர்வு: சிறப்பு சிகிச்சை காப்பீடு ரூ.2 லட்சமாக உயர்வு

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஏழைகளுக்கு நவீன மருத்துவ வசதிகள், அனைவருக்கும் சுகாதார வசதி வழங்குவதற்காக முதல் வரின் விரிவான மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தை மறைந்த முன் னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012 ஜனவரி 11-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்கள் பதியப்பட்டு, காப்பீ்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் வரை யிலும் காப்பீடு வழங்கப்பட்டது. குறிப்பிட்ட 77 நோய்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்பட் டது. கடந்த 5 ஆண்டுகளில் இத் திட்டத்தில் 17.60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ரூ.3,615 கோடி செலவில் பயனடைந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 7.11 லட்சம் பயனாளி களுக்கு ரூ.1,286 கோடி காப்பீட்டு செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதிநவீன உயர் சிறப்பு சிகிச்சை களான கல்லீரல், சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை, ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சைகள், காது வால்வு உள்வைப்பு அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளுக்கு ஏழை களுக்கு உதவும் வகையில், ரூ.35 கோடி மாநில அரசின் பங்களிப் புடன் கூடிய தொகுப்பு நிதி உருவாக் கப்பட்டுள்ளது. சிறப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள் எவ்வித செலவும் செய்யவேண்டி யது இல்லை. இதுவரை 4,300 பேர் ரூ.318.42 கோடி செலவில் அறுவை சிகிச்சை செய்து பயனடைந்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக சிறப் பாக செயல்பட்டு வந்த இத்திட்டத் துக்கு காப்பீட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தம் கடந்த ஜனவரி 10-ம் தேதியுடன் முடிந்தது. கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி சட்டப் பேரவையில் ஆளுநர் நிகழ்த்திய உரையில், ‘முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்’ என அறிவிக் கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி இதற் கான ஒப்பந்தம் வரவேற்கப்பட்டது.

ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன் றுக்கு மிகக் குறைந்த பிரீமியம் ரூ.699 ஆக குறிப்பிட்ட யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற் கான அரசாணை கடந்த 10-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிறுவனம் இந்த காப்பீட்டுத் திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு செயல்படுத்தும். இதற்கு ஆண்டுக்கு ரூ.1,270 கோடி நிதி ஒதுக்கப்படும்.

தொடர்ந்து செயல்படுத்தப்படும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில், சிறப்பு சிகிச்சை களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.1.50 லட்சம், ரூ.2 லட்சமாக உயர்த் தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் 312 சிகிச்சை முறைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

கட்டுமான தொழிலாளர் சேர்ப்பு

இத்திட்டத்தில் முதல்முறை யாக, தமிழகத்தில் குடியேறி 6 மாதங்களுக்கு மேல் வசிக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட புலம்பெயர்ந்தவர்கள், முறையான அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்டு, தொழிலாளர் நலத்துறை மூலம் சேர்க்கப்படுவர். மாநில அரசால் ஆதரவற்றோர் என வரையறுக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு நபருக்கும் தனி காப்பீட்டு அட்டை வழங்கப்படும். தற்போதைய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை முறை தொடரும். மேலும், மின்னணு அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து அச்சடிக்கும் வழிமுறையும் இதில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் மையங்கள் தொடர்ந்து செயல்படும். தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்துடன் இணைந்து பயனாளிகளின் ஆதார் எண் இணைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டணமில்லா தொலைபேசி

பயனாளிகள் தற்போதுள்ள திட்டம் போலவே தொடர்ந்து காப்பீட்டு அட்டை, மின்னணு அட்டை உபயோகித்து சிகிச்சை பெறலாம். திட்டம் பற்றி அறிந்து கொள்ளவும், சிகிச்சை பெற வழி காட்டு உதவிகள் பெறவும், குறை கள், புகார்களை தெரிவிக்கவும் 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைப் பயன் படுத்தலாம். மாவட்ட ஆட்சியரின் தலைமையில் உள்ள மாவட்ட கண்காணிப்பு, குறைதீர்த்தல் செயற்குழுவிடமும் புகார் அளிக்கலாம். அதிலும் மேல்முறை யீடு இருந்தால், தமிழ்நாடு அரசு சுகாதாரத் திட்ட இயக்குநர் தலைமையில் உள்ள மாநில கண்காணிப்பு, குறைதீர்த்தல் செயற்குழுவிடம் முறையிடலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x