Published : 20 Mar 2017 09:25 AM
Last Updated : 20 Mar 2017 09:25 AM

ஏழை குழந்தைகள் கல்வி மேம்பாட்டுக்கு பாடுபடும் தீபம் தன்னார்வ அமைப்பின் 9-வது ஆண்டு விழா

சென்னையில் இயங்கி வரும் ஒரு தன்னார்வ அமைப்பு “தீபம்”. பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த அமைப்பில் தன்னார்வலர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வாரமும் விடுமுறை தினத்தில் சென்னை நகரில் ஏழை குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்குச் சென்று அவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி, கணினி பயிற்சி, ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சி உள்பட பல்வேறு சிறப்புப் பயிற்சிகளை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ‘தீபம்’ அமைப்பின் 9-வது ஆண்டு விழா ஆழ்வார்பேட்டை வெங்கடரமணா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ‘தீபம்’ அமைப்பின் தன்னார்வலர்கள் சிறப்பு பயிற்சி அளிக்கும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவு உயர்நிலைப் பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் பிவி ராவ் பள்ளி, ஆழ்வார்பேட்டை வெங்கடரமணா பள்ளி, மேற்கு மாம்பலம் வெங்கடநிவாஸம் பள்ளி, தி.நகர் எம்சிஎன் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 150 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

சிறப்பு பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில், தமிழில் கதை சொல்வது, ஆங்கில நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளிக்குழந்தைகள் உலக அளவில் மிகவும் பிரபலமான அமெரிக்காவின் ஸும்பா நடனமாடியதும், “ஓரிகேமி” எனப்படும் காகிதத்தில் பொம்மை உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களை செய்யும் ஜப்பானிய கலையை செய்துகாட்டியதும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x