Published : 03 Sep 2016 07:52 AM
Last Updated : 03 Sep 2016 07:52 AM

எல்ஐசி வைர விழா ஆண்டு கொண்டாட்டம் தொடக்கம்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. எனவே செப்டம்பர் 1, 2016 முதல் ஆகஸ்ட் 31, 2017 வரை எல்ஐசி வைர விழா ஆண்டை கொண்டா டுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் காப்பீட்டு வாரமாகக் கொண்டாடப்படுவதையொட்டி எல்ஐசி அலுவலகம் நேற்றுமுன்தினம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மண்டல மேலாளர் ஆர்.தாமோதரன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து உரையாற்றினார். அவர் கூறியதாவது:

எல்ஐசி தென்மண்டலம் என்றுமே வணிகம், வாடிக்கையாளர் சேவையில் அகில இந்திய அளவில் முக்கியமான இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் 20.29 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் ரூ.2660 கோடிக்கும் அதிகமான முதல் பிரீமியம் பெறப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் 75 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.9089 கோடி புது வணிக பிரீமியம் மூலம் காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் மொத்த பிரீமியம் வருமானம் ரூ.82,673 கோடியை கடந்துள்ளது. மேலும் 83 லட்சம் உரிமங்களுக்கு ரூ.30,047 கோடி வழங்கப்பட்டுள்ளது.

எல்ஐசி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிப்பதற்காக அவர்களின் வீடுகளுக்கே சென்று என்இஎஃப்டி படிவங்கள், மொபைல் எண்கள், இ-மெயில் விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளோம். www.licindia.in என்ற இணைய தளம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகின்றன.

ஏழைகள் மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கு 'கோல்டன் ஜூபிளி ஃபவுண்டேஷன்' மூலம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறோம். நாடெங்கிலும் உள்ள 356 திட்டங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x