Published : 08 Jan 2017 12:02 PM
Last Updated : 08 Jan 2017 12:02 PM

எதிர்காலத்தை தீர்மானிப்பது பிளஸ் 2 தேர்வு: மாணவர்களுக்கு தி.மலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை

‘தி இந்து’ SKR பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘இனிது இனிது தேர்வு இனிது’ விழா

மாணவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் தீர்மானிப்பது பிளஸ் 2 தேர்வுதான்’ என்று ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மற்றும் எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘இனிது இனிது தேர்வு இனிது’ மாணவர் திருவிழாவில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அதிகாரி வெ.ஜெயக்குமார் கூறினார்.

பிளஸ் 2 படிக்கும் மாணவர் களுக்கு பொதுத்தேர்வு குறித்து வழி காட்டும் வகையில், ‘தி இந்து’ தமிழ் நாளிதழும், சென்னை எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியும் இணைந்து ‘இனிது இனிது தேர்வு இனிது’ என்ற நிகழ்ச்சியை திருவண் ணாமலையில் நேற்று நடத்தின. திருமலை திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை திரு வண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வெ.ஜெயக்குமார் தொடங்கி வைத்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: தேர்வு நேரம் தொடங்கிவிட்டாலே மாணவர்களுக்கு பதற்றம், பயம், தயக்கம் ஆகியவை தானாகவே வந்துவிடும். தேர்வு என்பது தங்களின் எதிர்காலத்துக்கும் நல் வாழ்க்கைக்கும் அதோடு திறமை களை வெளிக்கொண்டு வருவதற் கும் ஒரு நல்ல வாய்ப்பு என்று மாண வர்கள் கருத வேண்டும். தேர்வை நினைத்துப் பயந்தால் தேர்வு துரத்திக் கொண்டேதான் இருக்கும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கின்றன. காலம் இன்னும் கடந்துவிட வில்லை. இப்போது திட்டமிட்டுப் படித்தால்கூட நல்ல மதிப்பெண் பெறலாம். மாணவர்களின் கவ னத்தை திசைதிருப்ப பல்வேறு விஷ யங்கள் உள்ளன. தொலைக்காட்சி, சினிமா மற்றும் பேஸ்புக், வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங் கள் மாணவர்களின் பொன்னான நேரத்தை அவர்களுக்குத் தெரியாமலேயே திருடிவிடும்.

பிளஸ் 2 தேர்வுதான் மாணவர் களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தை யும் அவர்கள் எதிர்காலத்தில் என்ன படிக்கப்போகிறார்கள் என்பதையும் தீர்மானிக்கும் என்று அவர் கூறினார்.

மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அதிகாரி பி.கோகிலா கூறியதாவது: பிளஸ் 2 தேர்வை எழுத இருக்கிற மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகை யில் இந்த வழிகாட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நம்பிக்கை வைத்தால் நம்மால் முடியாதது ஒன்றுமில்லை. மாணவர் களாகிய நீங்கள் தயவு செய்து உங்களுக்காகப் படியுங்கள். பெற் றோருக்காகவும், ஆசிரியர்களுக் காகவும் படிக்க வேண்டாம். தினமும் அதிகாலையில் எழுந்து மிகுந்த கவனத்தோடு படிக்க வேண்டும். இன்று நீங்கள் படிக்கும் படிப்பு தான் எதிர்கால வேலையை தீர் மானிக்கிறது என்று அவர் கூறினார்.

தன்னம்பிக்கை பேச்சாளர் ஹென்றி அமல்ராஜ், ஸ்ரீ வித்யா கல்வி மைய கவுரவ இயக்குநர் எஸ்.பி.சுப்பிரமணியன் ஆகியோர் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் உரையாற் றினர். 200-க்கு 200 மதிப் பெண் பெறுவதற்கான உத்திகளை வல்லுநர்கள் எடுத்துரைத்தனர். எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி யின் இயக்குநர் சுகந்தி ராமதாஸ் முன்னிலை வகித்தார். நிறைவாக, கல்லூரியின் செயலாளர் எஸ்.சுரேஷ்பாபு நன்றி கூறினார்.

‘தி இந்து’ மற்றும் எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியுடன் சண் முகா இண்டஸ்ட்ரீஸ் கலை-அறிவி யல் கல்லூரி, மாஸ்டர் ஜெஇஇ நுழைவுத்தேர்வு பயிற்சி மையம், சென்னை அகாடமி ஆப் ஆர்க்கி டெக்சர் டிசைன் கல்லூரி ஆகியவை நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x