Published : 13 Apr 2017 11:30 AM
Last Updated : 13 Apr 2017 11:30 AM

டெல்லி தொடர் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு: விவசாயிகளின் கோரிக்கைகள்தான் என்ன?

பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 28 நாட் களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டங்களை நடத்திவரும் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். தேசத்தையே உலுக்கிய இந்த போராட்டத்துக்குப் பின்னரும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது நாட்டின் முதுகெலும் பான விவசாயிகளை அவமதிக் கும் செயல் என்கின்றனர் விவசாய சங்க நிர்வாகிகள்.

அரசுகள் செய்தது என்ன?

இந்தியாவில் 14 கோடி விவசாயி களும், தமிழகத்தில் 81 லட்சம் விவசாயிகளும் உள்ளனர். 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் விவசாயிகளின் நலன்களைப் புறக்கணிக்கும் கொள்கைகளைக் கடைப்பிடித் ததே, நம்நாட்டில் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்வதற் கான காரணம்.

இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிவில் இருந்து காக்க மத்திய, மாநில அரசுகள் உரிய கொள்கை முடிவு களை உடனடியாக எடுத்து, செயலில் இறங்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

விவசாயிகளின் கோரிக்கை கள்தான் என்ன என கேட்டதற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

உற்பத்தியையும், விவசாயி களையும் மையப்படுத்தி வேளாண்கொள்கைகளும், திட்டங் களும் வகுக்கப்பட வேண்டும். வேளாண்மை துறையில் உற்பத்தி, விவசாயிகளின் நலன் என உட்பிரிவுகள் தேவை. ராணுவத் துக்கு ஒதுக்கப்படும் தொகைக்கு நிகரான தொகையை மத்திய அரசு வேளாண் துறைக்கு ஒதுக்க வேண்டும்.

கடனாளியான விவசாயி

முறையான நீர்ப்பாசனம் இல்லாதது, குறைந்த வட்டியில் கடன் கிடைக்காதது, விளை பொருட்களுக்கு ஆதாய விலை கிடைக்காதது, நஷ்டத்தை ஈடுசெய்யும் தனிநபர் விவசாய காப்பீடு இல்லாதது உள்ளிட் டவையே விவசாயி கடனாளி யானதற்கான முக்கிய காரணங் கள். இவற்றுக்குத் தீர்வு கண்டால்தான் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.

தேசிய விவசாயிகள் ஆணைய பரிந்துரைகளை ஏற்று உற்பத்தி செலவில் 50 சதவீதம் லாபம் சேர்த்து, அதை உற்பத்திப் பொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயிக்க வேண்டும். 2022-ம் ஆண்டுக்குள் 14 கோடி விவசாயிகளுக்கும் வங்கிக் கடன் உத்தரவாதம் வழங்க வேண்டும். தேசிய நீர்வழிச்சாலைத் திட்டத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்துக்கு என்ன தேவை?

காவிரி நீர் பிரச்சினையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு 1971-ல் 378 டிஎம்சி தண்ணீர் கிடைத்தது. 1991-ல் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி 205 டிஎம்சி, 2007-ல் இறுதித் தீர்ப்பில் 192 டிஎம்சி என குறைத்து வழங்கவே உத்தரவிடப்பட்டது.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை விரைந்து அமைக்க வேண்டும். புதிய பயிர்காப்பீட்டுத் திட்டத்தை தனி நபர் விவசாய காப்பீடாக மாற்றி, தனியார் நிறுவனங்களைத் தவிர்த்து, தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

டாக்டர் ஜே.சி.குமரப்பாவின் தற்சார்பு சுதேசி பொருளாதாரமும் - தற்சார்பு பசுமை கிராமங்களும் மட்டுமே அழிவின் விளிம்பில் உள்ள இந்தியாவின் கிராமப்புற மக்களையும், விவசாயிகளையும் காப்பாற்றும்.

இயற்கையைச் சிதைக்காத அறிவியல் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் இந்திய பாரம்பரிய கால்நடை இனங்கள், பசு இனங்களைக் கொண்டு ஊட்டமேற்றிய உரங்கள் தயாரிப்பு, நஞ்சில்லா உணவு ஆகியவை அரசுகளின் கொள்கைகளாக மாற வேண்டும்.

‘விவசாயிகளைக் காப்போம்- இந்தியாவைக் காப்போம்’ என்பது மத்திய, மாநில அரசுகளின் முதன்மையான கொள்கையாக இருக்க வேண்டும். இதற்கான முன்முயற்சிகளை பிரதமர் மோடி முன்னெடுக்க, விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x