Published : 03 May 2017 08:15 AM
Last Updated : 03 May 2017 08:15 AM

ஒரு தாய், ஒரு மக்கள் என போதித்த மாபெரும் மகான் ஸ்ரீ ராமானுஜர்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்று வரும் ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கும் கண்காட்சியைப் பார்வையிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ‘ஒரு தாய், ஒரு மக்கள்’ என்று போதித்த மாபெரும் மகான் ஸ்ரீ ராமானுஜர் எனப் புகழாரம் சூட்டினார்.

ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும் புதூரில் உள்ள ஹயக்ரீவ வித்யாஷ்ரம் பள்ளியில், ‘அற்புத ராமானுஜர்’ என்ற தலைப்பில் ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கும் கண்காட்சி, ஸ்ரீ ராமானுஜர் குறித்த தொடர் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சி கள், பஜனைகள் கடந்த 27-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. லிப்கோ சாரிட்டீஸ் டிரஸ்ட் சார்பில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று பார்வையிட்டு ஸ்ரீ ராமானுஜரின் தமிழ்த்தொண்டு என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

இதையடுத்து செய்தியாளர் களிடம் பேசிய அவர், ‘எந்தவிதமான பாகுபாடும் பார்க்காமல் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ வலியுறுத்திய ஸ்ரீ ராமானுஜர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. மனித சமுதாயம் எந்தவிதமான வேறுபாடும் இன்றி ‘ஒரு தாய் , ஒரு மக்கள்’ என போதித்த மிகப்பெரிய மகான் ஸ்ரீ ராமானுஜர்’ என்றார்.

ஸ்ரீபெரும்புதூர் அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.பொன்னையன், மாஃபா பாண்டியராஜன், மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், முன்னாள் எம்.பி. அசோக்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் மணிமாறன், ஓம் சக்தி சேகர், நிர்மலா பெரியசாமி, லிப்கோ நிறுவனத்தின் தலைவர் விஜயசாரதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x