Last Updated : 27 Jun, 2016 11:37 AM

 

Published : 27 Jun 2016 11:37 AM
Last Updated : 27 Jun 2016 11:37 AM

1,100 ஆண்டுகளுக்கு முன்பே நதிகள் இணைப்பில் சிறந்து விளங்கிய பாண்டிய, சேதுபதி மன்னர்கள்

ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,100 ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்ட நதிகள் இணைப்பு நீர் மேலாண்மையில் பாண்டிய மன்னர்களும், சேதுபதி மன்னர்களும் சிறந்து விளங்கி உள்ளனர்.

ராமநாதபுரம் சீமை 15-ம் நூற் றாண்டின் தொடக்கம் வரை பாண் டிய நாட்டு அரசின் கீழ் இருந்து வந்தது. சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்குப் பின்னர் 1892-ல் ஜமீன் தாரி முறை ஒழிக்கப்பட்டு 1910-ம் ஆண்டில் மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளைச் சேர்த்து ராமநாதபுரம் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது. 1985-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து ஊர்களி லும் கண்மாய்கள், குளங்கள், குட்டைகள், குட்டங்கள், ஊரணிகள், ஏந்தல்கள் போன்ற நீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவி மழை நீர், ஆற்று நீர், ஊற்று நீர் என கிடைக் கும் அத்தனை நீரையும் சேகரித்து வைக்கும் திட்டங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு செயல்படுத்தி, நீர்வளம் செழிக்கச் செய்து நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர் பாண்டிய மன்னர்கள். அதைத் தொடர்ந்து சேதுபதி மன்னர்கள் தங்கள் ஆட்சியில் தொடர்ந்து பராமரித்தும், புதிய வற்றை உருவாக்கியும் வந்துள்ள னர்.

இது குறித்து ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜ குரு `தி இந்து’விடம் கூறியதாவது:

ராமநாதபுரம், விருதுநகர், சிவ கங்கை ஆகிய மூன்று மாவட்டங் களில் மட்டும் 795 ஊர்களின் பெயர் கள் குளம் என முடிகிறது. ஏந்தல் என்ற பெயரில் 562 ஊர்களின் பெயர்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் என அழைக்கப்படும் ராஜசிம்ம மங்கலத்தில் உள்ள கண்மாய், நதிநீர் இணைப்பை 1,100 ஆண்டு களுக்கு முன்பே பாண்டியர்கள் செயல்படுத்திக் காட்டியதற்கு ஆதாரமாக விளங்குகிறது. இக்கண்மாய் வைகை, சரு கணி ஆகிய ஆறுகளை இணைத்து அந்த ஆறுகளில் இருந்து வரும் நீரைக் கொண்டு நிரம்பும் வகை யில் அமைக்கப்பட்டுள்ளது.

மங்கலம் என்ற சொல் நற் பயன், அதிர்ஷ்டம் என்னும் பொருள் களில் வழங்கி மக்களின் குடியிருப்பு களையும் குறிக்கத் தொடங்கியது. இடைக்காலத்தில் பிராமணர்களின் குடியிருப்புகள் மங்கலம் எனக் குறிக்கப்பட்டன. அக்கால அரசர்கள் பிராமணர்களின் நிலங்களைக் கொடையாகத் தரும் போது தம் பெயர் விளங்க தம் பெயருடன் ‘சதுர்வேதிமங்கலம்’ என இணைத்துப் பெயர் சூட்டி ஊரமைத்துள்ளனர்.

அந்த வகையில் கி.பி.900 முதல் கி.பி.920 வரை பாண்டிய நாட்டை ஆண்ட மூன்றாம் ராஜசிம்ம பாண்டி யன், ராஜசிம்மமங்கலம் பேரேரியு டன் தனது பெயரில் ஊரையும் அமைத்து பிரம்மதேயமாக பிராம ணர்களுக்கு வழங்கியதை சின்ன மனூர் செப்பேடுகள் தெரிவிக் கின்றன.

ராஜசிம்மமங்கலம் கண்மாய்க்கு நீர்வரத்துக்காக வைகை, சருகணி ஆகிய ஆறுகளில் இருந்து இரு கால்வாய்களை வெட்டி இணைத் துள்ளனர். ராமநாதபுரம் நயினார் கோவில் சாலையில் பாண்டியூ ருக்கு அருகே வைகை நதியில் இருந்து செல்லும் கீழநாட்டார் கால்வாய் மூலம் தண்ணீர் ராஜசிங்க மங்கலம் கண்மாய்க்கு செல்கிறது.

இக்கால்வாய் பாண்டியூர், சித்தனேந்தல், பந்தப்பனேந்தல், தவளைக்குளம், நகரம், அரியாங் கோட்டை ஆகிய ஊர்களின் வழி யாகச் சென்று வாதவனேரி என்ற ஊரில் ராஜசிம்மமங்கலம் கண் மாயை அடைகிறது. இக்கால்வாய் 20 கி.மீ. தூரம் உள்ளது.

அதேபோல் சருகணி ஆற்றில் இருந்து வரும் ஒரு கால்வாய் கல்லடிதிடல் என்ற இடத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதன் ஒரு பகுதி கண்மாய்க்குள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மற்றொரு பகுதி கோட் டைக்கரை ஆறாக கடலுக்குச் செல்லுமாறு அமைத்துள்ளனர்.

இக்கண்மாயின் நீர்பிடிப்பு பரப்பு 147 சதுர மைல் ஆகும். இக்கண்மாய் நிரம்பும்போது அதில் இருந்து 72 கண்மாய்களுக்கு நீர் செல்லவும், உபரி நீர் கடலுக் குச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இக்கண்மாய் சேதுபதி களின் ஆட்சிக் காலத்தில் மிகச் சிறப் பாகப் பேணப்பட்டு நீரை வெளி விட 48 மடை வாய்க்கால்கள் அமைக் கப்பட்டன. ‘‘நாரை பறக்காத நாற்பத்தெட்டு பெருமடைக் கண் மாய்” என்ற வழக்கு இப்பகுதியில் உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x