Last Updated : 06 Jun, 2016 08:33 AM

 

Published : 06 Jun 2016 08:33 AM
Last Updated : 06 Jun 2016 08:33 AM

உலக சுற்றுச்சூழல் தினத்தில் விவசாயிகளுக்கு 2 ஆயிரம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய பேருந்து ஓட்டுநர்

உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று விவசாயிகளுக்கு 2 ஆயிரம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார் அரசுப் பேருந்து ஓட்டு நர் ‘மரம்’ கருணாநிதி.

திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி அருகே உள்ள ஆதி ரங்கத்தில் தேசிய நெல் திருவிழா வின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விழா வில், விழுப்புரம் மாவட்டம் சங்கீத மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, அரசுப் பேருந்து ஓட்டுநர் கருணாநிதி பங்கேற்றார். உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று, இந்த விழாவில் பங்கேற்ற விவசாயிகளுக்கு 2 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி, அவற்றை நடும் முறை, பராமரிப்பது குறித்து விளக்கினார் அவர்.

இயற்கையின் மீதும், மரங்கள் மீதும் பற்று கொண்ட கருணாநிதி, தனது பெயருக்கு முன் மரம் என்பதை சேர்த்துக்கொண்டு, தன்னை ‘மரம் கருணாநிதி’ என்றே அழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல் லும் இவர், தனது சொந்த செலவில் 1,000 மரக்கன்றுகளை வாங்கி, அந்த விழாக்களுக்கு வருபவர்களுக்கு வழங்குகிறார்.

இவ்வாறு சுமார் 7 லட்சம் மரக்கன்றுகளை வழங்கி யுள்ளதாகக் கூறும் கருணாநிதி, தனது வாழ்நாளில் 100 கோடி மரக்கன்றுகளை வழங்குவதே லட்சியம் என்கிறார்.

“பிறந்த மண்ணுக்குப் பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டுமென்பதற்காக, மரக்கன்றுகளை நடத் தொடங்கி னேன். நான் சம்பாதிப்பதில் பாதி தொகையை மரக்கன்றுகளுக்காக செலவிடுகிறேன். சந்தனம், வேங்கை, செண்பகம், மனோரஞ் சிதம், செம்மரம், மகிழம், மா, பலா உள்ளிட்ட உயர்ந்த வகை மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறேன். நான் இலவச மாக மரக்கன்றுகளை வழங்குவதை யறிந்த நர்சரி உரிமையாளர்கள், குறைந்த விலையில் மரக்கன்று களை வழங்கி என்னை ஊக்குவிக் கின்றனர்.

சாலைகள் விரிவாக்கத்துக்காக அதிக அளவில் மரங்கள் வெட்டப் படுகின்றன. எனவே, விரிவாக்கப் பணிகளைத் தொடங்கும்போதே, மரக்கன்றுகளை நடும் பணியையும் தொடங்க வேண்டும். மரம் வளர்க்க விரும்புவோருக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி வழங்க வேண் டும்.

கடலோர மாவட்டங்களில் அலையின் தாக்கத்தைக் குறைக்க, அதிக அளவில் பனை மரங்களை நட வேண்டும். அலையாத்திக் காடு களை அதிகப்படுத்த வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப மரங் களை வளர்ப்பதே, புவி வெப்ப மடைவதைத் தடுக்க உதவும்” என்று கூறுகிறார் கருணாநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x