Published : 05 Dec 2013 05:29 PM
Last Updated : 05 Dec 2013 05:29 PM

மதுரை தாக்குதலில் ஒருவர் பலி: முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

மதுரையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் மரணமடைந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்பாக கையொப்பமிட இன்று அனுப்பானடி அருகே சிலர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கள்.

அப்போது அவ்வாகனத்தின் மீது சில சமூக விரோதிகள் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியதால் வாகனத்தில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டம், பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் முத்துவிஜயன் என்கிற ரமணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் இத்துயர சம்பவத்தில் மேல அனுப்பானடியைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவரின் மகன் சோனையா, அனுப்பானடியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் முனீஸ்குமார், திருஞானம் என்பவரின் மகன் விக்னேஸ்வரன் மற்றும் தவசி என்பவரின் மகன் அர்ச்சுனன் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த முத்துவிஜயன் என்கிற ரமணி அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளது.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த முத்துவிஜயன் குடும்பத்துக்கு ஐந்து லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்தர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கும் ஆணையிடப்பட்டுள்ளது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x