Published : 05 Sep 2016 10:42 AM
Last Updated : 05 Sep 2016 10:42 AM

திருக்கோவிலூர் உண்டு உறைவிடப் பள்ளியில் 2 மாணவர்கள் மர்ம மரணம்

திருக்கோவிலூரில் இயங்கி வரும் அரசு நிதியுதவி பெறும் உண்டு உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக் கோவிலூர் சந்தைப்பேட்டையில் அரசு நிதியுதவி பெறும் உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 92 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இங்கு படித்து வந்த திருக்கோவி லூர் அருகே துரிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் அய்யனார்(8), நேற்று அதிகாலை திடீரென தலை வலிக்கிறது என கூறி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த மற்ற மாணவர்கள் பள்ளியின் நிர்வாகி செல்வராஜிடம் தெரிவித் தனர். உடனடியாக அய்யனாரை திருக்கோவிலூர் அரசு மருத் துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கள், அய்யனார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சிறிது நேரத்தில், அப்பள்ளி யில் 4-ம் வகுப்பு படிக்கும் அம்மன் கொள்ளைமேடு கிராமத்தைச் சேர்ந்த அய்ய னார் மகன் ராஜதுரை(10) மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனே திருக் கோவிலூர் அரசு மருத்துவமனைக் குக் கொண்டுசென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று மாலை சிகிச்சை பலனின்றி ராஜ துரை உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தகவல் அறிந்த மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் மார்ஸ், கோட்டாட்சியர் செந்தாமரை, வட்டாட்சியர் பாண்டியன், வட் டார மருத்துவ அலுவலர் தன சேகரன், தொடக்கக் கல்வி அலு வலர் முரளி கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பாம்பு தீண்டியதா?

மாணவர்கள் சாப்பிட்ட உணவு நஞ்சாக மாறி இருக்கலாம் அல்லது தூங்கிக்கொண்டு இருந்த மாணவர்களை பாம்பு தீண்டி இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x