Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM

அணு மின் நிலையங்கள் ஒருபோதும் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது: எரிசக்தித் துறை முன்னாள் செயலாளர் பேட்டி

அணு மின் நிலையங்களால் ஒரு போதும் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று எரிசக்தித் துறை முன்னாள் செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா கூறியுள்ளார்.

நிலக்கரியால் ஏற்படும் ஆபத்து கள் மற்றும் விளைவுகளைப் பற்றிய சிறப்புக் கருத்தரங்கம், சென்னை யில் சனிக்கிழமை நடந்தது. இதில், மத்திய எரிசக்தித்துறை முன்னாள் செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா பங்கேற்றார்.

பின்னர் ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி: பெரும்பாலான அரசியல் கட்சிகளும் அரசும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங் களைச் சார்ந்தே இயங்குகின்றன. மின் தேவையை சரியாக உணர்ந்து, அதற்கான மின் தொடர் (டிரான்ஸ்மிஷன்) கட்டமைப்பு களை உருவாக்க வேண்டும். ஆனால், மின் தொடரில் முதலீடு செய்வதை விடவும், அதிக அளவுக்கு சுற்றுச்சூழலை மாசுபடுத் தும் திட்டங்களிலேயே கவனம் செலுத்துகின்றனர். ஏனெனில், டிரான்ஸ்மிஷனைவிட மின் திட்டங் களில்தான், தனியார் ஆதிக்கம் உள்ளது.

கலாம் கூறுவது தவறு

அணு மின் நிலையங்கள் ஒரு போதும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யாது. அணு மின் நிலையங்கள் குறித்து அப்துல் கலாம் கூறுவது தவறானது. அவர் அணு மின் சக்தி விஞ்ஞானி அல்ல. நான் இந்திய அணு மின் சக்தி கழகத்தில் விலை நிர்ணயக் கமிட்டித் தலைவராக இருந்தவன். அணுவின் பாதிப்புகளும் அதனால் ஆகும் அதிகபட்ச செலவுகளும் எனக்கு நன்றாகத் தெரியும்.

நாட்டில் மொத்தம் 30 இடங்களில் புதிதாக அனல் மற்றும் அணு மின் நிலையங்கள் வரவுள்ளன. இதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 40 ஆயிரம் மெகாவாட் உற்பத்தியாகும் புதிய நிலையங் கள் அமைக்கப்பட உள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்க ளில் தனியாருடன் கையெழுத்திடு கின்றன. பெரும்பாலான புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் சரியாக, முறையாக செயல்படுத்தப் படுவதில்லை. மரபுசாரா எரிசக்தி களை அதிகப்படுத்துவது மட்டு மின்றி, மெகாவாட் என்ற நிலையை மாற்றி, மறு சுழற்சி அடிப்படையிலான நெகாவாட் மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கருத்தரங்கில் இ.ஏ.எஸ்.சர்மா பேசியதாவது: அனல் மின் நிலையங்களால் நீர், மண் மற்றும் காற்று உள்ளிட்டவற்றின் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அந்தப் பகுதியில் வசிப்போருக்கு ரத்தத்தில் பாதரசம் கலந்து விடுகிறது.

மத்திய அரசு முட்டுக்கட்டை

இதுகுறித்து, பல்வேறு ஆய்வு கள் தெளிவுபடுத்தி உள்ளன. ஆனால், இந்த ஆய்வின் முடிவு களை வெளியிட மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களாக இருந்த ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ஜெயந்தி நடராஜன் ஆகியோரிடம் பலமுறை ஆதாரத் துடன் மனு அளித்தும், அவர்கள் மின் நிலையங்கள் விவகாரத்தில் அமைதியாகவே இருந்தனர்.

தேசிய தேர்தல் அமைப்பு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். இந்த அமைப்பின் சார்பில், அனல் மற்றும் அணு மின் நிலையங் களைச் சேர்ந்த பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகி றோம்.

தனியாருடன் கூட்டு சேர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக, வரும் தேர்தலில் தங்கள் வாக்குகளை மக்கள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x