Published : 01 Aug 2016 11:08 AM
Last Updated : 01 Aug 2016 11:08 AM

குளச்சல் வர்த்தக துறைமுக விவகாரம்: விரிவான திட்ட அறிக்கை தயாரித்த பின் துறைமுகம் அமையும் இடம் முடிவு செய்யப்படும் - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

“குளச்சல் வர்த்தக துறைமுகம் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்த பின்னரே துறைமுகம் அமையும் இடம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைய உள்ள குளச்சல் வர்த்தக துறைமுகம் குறித்து பொதுமக்களிடையே பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது. இந்நிலையில் துறைமுகம் குறித்த உண்மை நிலையை விளக்கும் வகையில் நாகர்கோவிலில் நேற்று அனைத்து கட்சி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வ.உ.சி. துறைமுக அதிகாரிகள் போஸ், நடராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திமுக தரப்பில் எம்.எல்.ஏ.க்கள் மனோதங்கராஜ், சுரேஷ்ராஜன், காங்கிரஸ் சார்பில் மாவட்ட செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், அசோகன் சாலமன், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், தேமுதிக மாவட்ட செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எம்.எல்.ஏ.க்கள் கருத்து

கூட்டத்தில், மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. பேசும்போது, “குளச் சல் வர்த்தக துறை முகம் செயல்பாட்டுக்கு வந்தால் மீனவர் களுக்கும், கடற்கரை யோரத்தில் வசிப்போருக்கும் பாதிப்பு ஏற்படும்” என்றார்.

சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறும்போது, “மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு எவ்வித பாதிப்பும் இன்றி துறைமுகத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக் கிறேன்” என்றார்.

குளச்சல் நகராட்சி முன்னாள் தலைவர் ஜேசையா கூறும்போது, “குளச்சல் துறைமுகத்துக்காக தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை நம்பகத்தன்மையற்றதாக உள்ளது. எனவே, இத்திட்டத்தை மறுபரிசீ லனை செய்ய வேண்டும்” என்றார்.

கூட்டத்தில் பேசிய மதிமுக, தேமுதிக, பாமக, காந்திய மக்கள் கட்சி மற்றும் பல்வேறு கட்சியினர் குளச்சல் துறைமுகத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

விரிவான திட்ட அறிக்கை

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது, “குளச்சல் வர்த்தக துறைமுக திட்டம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டம். இதனால், மீனவர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. முன்னேற்றமே ஏற்படும். துறைமுகம் குறித்து இன்னும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யவில்லை. திட்ட அறிக்கை தயார் செய்த பின்னரே துறைமுகம் அமையும் இடம் குறித்து இறுதி செய்யப்படும். மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குளச்சல் துறைமுகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x