Published : 29 Jun 2016 09:34 AM
Last Updated : 29 Jun 2016 09:34 AM

5 நாட்களில் 670 ரவுடிகள் கைது: சென்னை போலீஸார் அதிரடி நடவடிக்கை

சென்னையில் கடந்த 5 நாளில் 670 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகரில் குற்றப் பின்னணி உள்ள நபர்கள், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், முக்கியமாக சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் அல்லது விளைவிக்கக் கூடும் என சந்தேகிக்கும் நபர்களை கண் காணித்து நடவடிக்கை மேற் கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன்பேரில் சென்னை பெருநகரில் 4 மண்டலங்களில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் கடந்த 24, 25, 26, 27 ஆகிய 4 தினங்கள் மட்டும் 491 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நேற்று ஒரே நாளில் 179 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வடக்கு மண்டலம்

வடக்கு மண்டலத்தில் மாத வரம் காவல் மாவட்டத்தில் 24 பேர், வண்ணாரப் பேட்டையில் 18 பேர் மற்றும் பூக்கடை காவல் மாவட்டத்தில் 8 பேர் என மொத்தம் 50 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்கு மண்டலம்

மேற்கு மண்டலத்தில் புளியந் தோப்பு காவல் மாவட்டத்தில் 47 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 15 பேர் மற்றும் அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் 15 பேர் என மொத்தம் 77 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தெற்கு மண்டலம்

தெற்கு மண்டலத்தில் தியாகராயநகர் காவல் மாவட்டத்தில் 11 பேர், அடையாறு மாவட்டத்தில் 3 பேர் மற்றும் புனித தோமையர்மலை மாவட்டத்தில் 10 பேர் என 24 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கிழக்கு மண்டலம்

கிழக்கு மண்டலத்தில் கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் 14 பேர், திருவல்லிக்கேணி மாவட்டத்தில் 3 பேர், மயிலாப்பூர் மாவட்டத்தில் 11 பேர் என பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மொத்தம் கடந்த 5 நாளில் 670 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x