Published : 23 Jul 2016 08:07 AM
Last Updated : 23 Jul 2016 08:07 AM

உயர் நீதிமன்றம் தடை விதித்த பிறகும் வலைதளங்களில் ‘கபாலி’ படம் வெளியானதாக முறையீடு: 26-ம் தேதி விசாரணை

கபாலி திரைப்படத்தை வெளியிட 169 இணையதள சேவை நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வலைதளங்களில் கபாலி படம் வெளியானதாக உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரனிடம் வழக்கறிஞர் பி.குருமூர்த்தி முறையிட்டார். இவ்வழக்கு விசாரணை வரும் 26-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

கபாலி படத்தை வலைதளங்களில் வெளியிடு வதை தடுக்கக் கோரி கபாலி படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ் வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கபாலி திரைப் படத்தை வலைதளங்களில் வெளியிடக் கூடாது என்று 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதித்தார்.

ஆனால், கபாலி படம் வெளியான தினத்திலேயே இணையதளத்திலும் வெளி யானது. இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரனிடம் வழக் கறிஞர் பி.குருமூர்த்தி நேற்று முறையிடும்போது, “உங்களது உத்தரவை 50 சதவீத இணைய தள சேவை நிறுவனங்கள் பின்பற்றவில்லை” என்று கூறி, கபாலி படம் பதிவிறக்கம் செய்யப்பட்ட சி.டி.யை நீதிபதியிடம் காட்டினார்.

இணையதள பட்டியல்

இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா என்று கேள்வி எழுப்பினார். கபாலி படத்தை பதிவிறக்கம் செய்த இணையதள சேவை நிறுவனங்களின் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயா ராக இருப்பதாக வழக்கறிஞர் குருமூர்த்தி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை வரும் 26-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x