Published : 09 Jun 2017 08:51 AM
Last Updated : 09 Jun 2017 08:51 AM

புதுக்கோட்டையில் 127 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி இன்று திறப்பு: முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார்

புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (ஜூன் 9) திறந்து வைக் கிறார்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரில் உள்ள புதுக் கோட்டை அரசு தலைமை மருத் துவமனை மற்றும் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை உட்பட 14 மருத்துவமனைகள், 66 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ளன.

ஆனால், இம்மருத்துவமனை களில் போதிய, உரிய மருத்துவக் கருவிகள், மருத்துவர்கள் இல்லா ததால், உயர் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், மதுரை போன்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல நாள்தோறும் பரிந்துரைக்கப்பட்டு வந்தனர்.

புதுக்கோட்டையில் இருந்து 50 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள இந்த மருத் துவக் கல்லூரிகளுக்கு கொண்டு செல்லப்படும் நோயாளிகளில் சிலர் வழியிலேயே இறக்கும் சூழல் ஏற்பட்டது.

இந்த அவலநிலையைப் போக்கவும், மாவட்டத்தில் உள்ள 16 லட்சம் பேருக்கும் பயனளிக்கும் வகையிலும் புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 2015-ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதன்படி, புதுக்கோட்டையில் 127 ஏக்கரில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டுள் ளது. 150 பேர் சேர்ந்து பயிலும் வகையில் பல்வேறு நவீன வசதி களுடன் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (ஜூன் 9) காலை 12.30 மணிக்கு திறந்து வைக்க உள்ளார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் முதல்வர், அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை வழியாக மருத்துவக் கல் லூரிக்கு வருகிறார்.

மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெறும் மருத் துவக் கல்லூரி திறப்பு விழா வுக்கு, மக்களவை துணைத் தலை வர் மு.தம்பிதுரை முன்னிலை வகிக்கிறார். மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ் ணன் வரவேற்கிறார், மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் நன்றி கூறுகிறார்.

இந்த விழாவில் மக்கள் நல் வாழ்வுத் துறை சார்பில் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன. திறப்பு விழாவையொட்டி, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட மாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன.

மத்திய மண்டல ஐஜி வி.வரத ராஜூ தலைமையில் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் மாவட்டங் களைச் சேர்ந்த ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x