Last Updated : 05 Jan, 2016 08:26 AM

 

Published : 05 Jan 2016 08:26 AM
Last Updated : 05 Jan 2016 08:26 AM

அதிமுகவிடம் இருந்து அழைப்பு வராததால் கூட்டணி குழப்பத்தில் ஜி.கே.வாசன்

அதிமுகவிடம் இருந்து எந்த அழைப்பும் வராததால் சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி அமைப்பதில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குழப்பத்தில் இருப் பதாக கூறப்படுகிறது.

கட்சி தொடங்கியது முதல் அதிமுகவை விமர்சிப்பதை வாசனும், தமாகாவின் மற்ற தலை வர்களும் தவிர்த்தே வந்தனர். அதிமுகவையும், தமிழக அரசை யும் விமர்சிக்கும் நிலை ஏற்பட்ட போதுகூட திமுகவையும் சேர்த்தே விமர்சித்து வந்தனர்.

சமீபத்திய மழை, வெள்ள சேதத் தின்போது அனைத்துக் கட்சி களும் அதிமுக அரசையும், முதல் வர் ஜெயலலிதாவையும் கடுமை யாக விமர்சித்தன. ஆனால், தமாகா தலைவர்கள் மட்டும் முதல்வர் ஜெயலலிதாவை விமர் சிக்கவில்லை. மேலும், அதிமுகவு டன் தமாகா கூட்டணி அமைக் கும் என அக்கட்சியினர் வெளிப்படை யாகவே பேசி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி மக்கள் நலக் கூட்டணி தலை வர்கள் ஜி.கே.வாசனை சந் தித்து தங்கள் கூட்டணிக்கு வரு மாறு அழைப்பு விடுத்தனர்.

இதுகுறித்து தமாகா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், ‘தி இந்து’விடம் கூறியதாவது: தற்போதைய நிலை யில் எப்படி கூட்டணி அமையும் என்பதை யாராலும் கணிக்க முடி யாது. கூட்டணி குறித்து நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதனால், யாருக்கும் எந்த உத்தரவாதத்தையும் அளிப்பது சாத்தியமற்றது. அதிமுக - தமாகா இடையே கூட்டணி தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் இது வரை நடைபெறவில்லை.

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். எனவே, மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக, தமாகா இணைந்தால் அது வலு வான 3-வது அணியாக இருக்கும். 2-வது அணியாக வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்றார்.

பிப்ரவரி இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் அட்ட வணை வெளியாகும் என எதிர் பார்க்கப்படும் நிலையில் அதிமுக விடம் இருந்து எந்த அழைப்பும் வராததால் வாசன் உள்ளிட்ட தமாகா தலைவர்கள் கூட்டணி முடிவு எடுப்பதில் பெரும் குழப் பத்தில் இருப்பதாகக் கூறப்படு கிறது. கடைசி நேரத்தில் அழைப்பு வந்தாலும் கவுரமான தொகுதிகள் கிடைக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

தொகுதிகளை கேட்டு பிடி வாதம் பிடித்தால் 2011-ல் மதிமுகவுக்கு ஏற்பட்ட நிலைதான் தங்களுக்கும் ஏற்படும் என்ற அச்சமும் தமாகாவினருக்கு ஏற்பட்டுள்ளது. எனவேதான் மக்கள் நலக் கூட்டணி தலைவர் களை வாசன் சந்தித்ததாக தமாகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x