புதுவையில் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்த 18 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்: ரூ.8 கோடி ரொக்கம், தங்கம் பறிமுதல்

வாக்​குச்​சீட்டை திருடிய சுயேச்சை வேட்​பாளர் கைது
தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள, ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ போஸ்டரை வெளியிட்ட புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர். உடன் அதிகாரிகள் தில்லை வேல் மற்றும் கந்தசாமி. | படம்: செ. ஞானபிரகாஷ் |

தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள, ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ போஸ்டரை வெளியிட்ட புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர். உடன் அதிகாரிகள் தில்லை வேல் மற்றும் கந்தசாமி. | படம்: செ. ஞானபிரகாஷ் |

Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்​சேரி​யில் அரசி​யல் கட்​சிகளுக்கு ஆதர​வாக பிரச்​சா​ரம் செய்​த​தாக 18 அரசு ஊழியர்​கள் சஸ்பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ளனர். வாக்​குச்​சீடு திருடிய சுயேச்சை வேட்​பாளர் ஒரு​வர் கைது செய்​யப்​பட்​டுள்ளார்.

இது வரை​ ரூ. 8.4 கோடி பணம், மது​பானங்​கள், தங்​கம் வெள்ளி போன்​றவை பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தலைமை தேர்​தல் அதி​காரி ஜவஹர் தெரி​வித்​தார். புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தல் இன்று (ஏப்​.9) நடக்​கிறது.

தேர்​தல் தொடர்​பாக தலைமை தேர்​தல் அதி​காரி ஜவஹர் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​து: புதுச்​சேரி​யில் இன்று வாக்​குப்​ப​திவு காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடக்​கும். மொத்​தம் 1,099 வாக்​குச்சாவடிகள் உள்​ளன. இதில் பதற்​ற​மானவை 209.

அதி பதற்​ற​மானவையாக 5 என கண்​டறியப்​பட்​டுள்​ளன. 3 இடங்​களில் தனித்து​வ​மான வாக்​குச்​சாவடிகளை அமைத்துள்​ளோம். இவற்றை பெண் அலு​வலர்​கள் மட்​டுமே நிர்​வகிப்​பர்.

புதிய அரசு ஊழியர்​கள் 15 வாக்​குச்​சாவடிகளை​யும், மாற்​றுத்​திற​னாளி அதி​காரி​கள் 2 வாக்​குச்​சாவடிகளை​யும் நிர்​வகிப்பர். வாக்​குப்​ப​திவு பணி​களில் 5 ஆயிரம் அதி​காரி​கள், பணி​யாளர்​கள் ஈடு​படு​வர். மைக்ரோ அப்​சர்​வர்​கள் 173 பேரும், போலீ​ஸார் 2800 பேரும் பணி​யில் ஈடு​படு​வர்.

புதுச்​சேரி​யில் ரூ. 77.25 லட்​சம்பணம், மது​பானங்​கள் ரூ. 65 லட்​சம், போதைப்​பொருட்​கள் ரூ. 21 லட்​சம், தங்​கம், வெள்ளி போன்​றவை ரூ. 6.71 கோடி என மொத்​தம் ரூ. 8.4 கோடி பறி​முதல் செய்​துள்​ளோம்.

புதுச்​சேரி தேர்​தலை பார்​வை​யிட கிர்​கிஸ்​தான், ஐவரி கோஸ்ட், மால்​டோ​வா, மங்​கோலி​யா, கயா​னா, பூடான் ஆகிய நாடு​களில் இருந்து 9 உறுப்​பினர்​கள் புதுச்​சேரி வந்​துள்​ளனர்.மொத்​தம் 9.5 லட்​சம் வாக்​காளர்​கள் உள்​ளனர்.

அரசி​யல் கட்​சிகளுக்கு ஆதர​வாக பிரச்​சா​ரம் செய்​த​தாக அரசு ஊழியர்​கள் 18 பேர் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ளனர். மொத்​தம் 12,591 தபால் வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளது. இம்முறை 90 சதவீத வாக்குப்பதிவு வரை எதிர்​பார்க்​கிறோம்.

வயதானவர்கள், கர்ப்​பிணி​கள்,மாற்​றுத்திற​னாளி​கள் உடனே வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்​குப்​ப​திவு இயந்​திரத்​தில் வாக்​குச்​சீட்டை பொருத்​தும்​போது, யாருக்​கும் தெரி​யாமல் எடுத்துச் சென்​ற சுயேச்சை வேட்​பாளரை கைது செய்​துள்​ளோம்.

புதுச்​சேரி​யில் 3, காரைக்​கால், மாஹே, ஏனாமில் தலா ஒன்று என வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்​ளன. அங்கு மூன்​றடுக்கு பாது​காப்பு போடப்​படும். இவ்வாறு தெரி​வித்​தார். உடன் தேர்​தல் துறை அதி​காரி​கள் தில்​லை​வேல், கந்​த​சாமி ஆகியோர் உடன் இருந்​தனர்​.

<div class="paragraphs"><p>தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள, ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ போஸ்டரை வெளியிட்ட புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர். உடன் அதிகாரிகள் தில்லை வேல் மற்றும் கந்தசாமி. | படம்: <em>செ. ஞானபிரகாஷ்</em> |</p></div>
பாகிஸ்தான் தலையீட்டால் போர் நிறுத்தம்: திமுக எம்.பி. சல்மாவின் பதிவால் திடீர் சர்ச்சை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in