Published : 10 Jun 2017 09:46 AM
Last Updated : 10 Jun 2017 09:46 AM

பிளாஸ்டிக் அரிசியை கண்டறிவது எப்படி?- உணவுப் பாதுகாப்பு அலுவலர் விளக்கம்

கடந்த சில நாட்களாக நாடு முழு வதும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்த வதந்தி வேகமாக பரவிவருகிறது. உணவு விற்பனைக் கூடங்களிலும் பிளாஸ்டிக் அரிசி யால் சமைக்கப்பட்ட உணவு பரிமாறப்பட்டதாக ஆங்காங்கே புகார்கள் வந்துள்ளன.

நாம் வாங்கும் அரிசி, பிளாஸ்டிக் அரிசியா என்று சந்தேகம் வந்தால் அதை எப்படி கண்டறிவது என்பது குறித்து நாகப்பட்டினம் நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அரிசியைப் போட்டு நன்றாக கலக்கினால் நல்ல அரிசி நீரின் அடியில் தங்கும். பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் மேலே மிதக்கும். ஒரு கைப்பிடியளவு அரிசியை லைட்டர் உதவியுடன் எரித்தால் பிளாஸ்டிக் எரிவது போன்ற நாற்றம் வீசினால் அது பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம்.

இதேபோல, சிறு பாத்திரத்தில் கொஞ்சம் அரிசியைப் போட்டு, கொதிக்கும் எண்ணெயை சில துளிகள் அதில் விட்டால் பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் எண்ணெய் படும் அரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும். சமைத்த பின், சிறிதளவு சாதத்தை எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்தால் 3 நாட்களுக்குப் பின்னர் அதில் பூஞ்சைகள் வளர்ந்திருந்தால் அது நல்ல அரிசி, பூஞ்சை வளராமல் இருந்தால் பிளாஸ்டிக் அரிசி என அறிந்துகொள்ளலாம்.

சமைக்கும்போது, கொதிக்கும் நீரில் அடர்ந்த மேல் அடுக்கு படலம் உருவானால் அது பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம். நல்ல அரிசியில் மெலிதான அடுக்கு படலம் உருவாகும்.

இவை அனைத்தும் ஓரளவு அறிந்துகொள்வதற்காக மட் டுமே. இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு பிளாஸ்டிக் அரிசி என முடிவெடுத்துவிடக் கூடாது. முறைப்படி உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் தெரி வித்து, அரிசியை ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்த பின்னரே அது பிளாஸ்டிக் அரிசி என்பதை உறுதி செய்யமுடியும்.

பந்து போல எழும்பினால்…

சமைக்கப்பட்ட சாதத்தை சிறிய உருண்டையாகப் பிடித்து டென் னிஸ் பந்தைப்போல அடித்துப் பார்த்தால், அதில் ஒட்டும் தன்மை யுள்ள அமிலோபெக்டின் என்ற பிளாஸ்டிக் போன்ற குளுக்கோஸ் இருப்பதால் பந்துபோல மேல் எழும்பும். இதைக்கொண்டு, அந்த அரிசி பிளாஸ்டிக் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. அது நடுத்தர மற்றும் சிறிய சைஸ் அரிசியாக இருக்க வாய்ப்புள்ளது. பெரிய (மோட்டா ரகம்) அரிசியில் கரையும் தன்மைகொண்ட, ஒட்டும் தன்மை யற்ற அமிலோஸ் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x