Published : 02 Jun 2016 08:43 AM
Last Updated : 02 Jun 2016 08:43 AM

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம், நோட்டு, சீருடை விநியோகம்: திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கிலும் இடைநிற்றல் இன்றி கல்வி கற்கும் வகையிலும் கட்டணமில்லா கல்வி, சத்தான உணவு, விலையில்லா சீருடை கள், மடிக்கணினிகள், பாடப் புத்த கங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பை, காலணிகள், பேருந்து பயண அட்டைகள், மிதி வண்டிகள் வழங்கு தல், பள்ளிகளின் கட்டமைப்பு களை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகளாக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் புதி தாக 221 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. 112 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளி களாகவும், 810 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. இதன்மூலம் மாணவர்கள், அவர்களின் குடி யிருப்புக்கு அருகிலேயே கல்வி பயில வழிவகை செய்யப் பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளுக்கு தேவைப் படும் உள்கட்டமைப்பு வசதிகளான புதிய பள்ளிக் கட்டிடங்கள், கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள், மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி கழிப்பறைகள், சுற்றுசுவர், மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கென சாய்வு தளங்கள் போன்றவை ரூ.4,165 கோடியே 95 லட்சம் செலவில் அமைத்துக் கொடுக் கப்பட்டுள்ளன. அதுமட்டு மின்றி, கடந்த 5 ஆண்டுகளில் 72,843 ஆசிரியர்கள் பணியமர்த் தப்பட்டுள்ளனர்.

நடப்பு கல்வி ஆண்டில் (2016-17) மாணவர்கள் மனநிறைவுடன் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்குடன் பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 90 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 77 லட்சம் மாணவ, மாணவியருக்கு நோட் டுப் புத்தகங்கள், 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 47 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடை ஆகியவற்றை வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார்.

அதன்படி, தலைமைச் செயலகத்தில் நேற்று 5 மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகளை வழங்கி, இத்திட்டத்தை முதல்வர் ஜெய லலிதா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி அமைச்சர் பி.பெஞ்சமின், தலைமைச் செயலாளர், கே.ஞான தேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா, துணைச் செயலாளர் ஏ.ஆர். ராகுல்நாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x