Published : 15 Jun 2016 07:38 AM
Last Updated : 15 Jun 2016 07:38 AM

மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் செப்டம்பர் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள், அரசின் மாத உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசு சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2016-17-ம் ஆண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவித்தொகை பெற, 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.36 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் வயது, வருமான சான்று இணைக்கப்பட வேண்டும். மேலும், தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள், தமிழறிஞர்கள் 2 பேரிடம் தகுதி நிலைச் சான்று பெற்று இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப் பப் படிவங்களை நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறை யின் இணைய தளத்திலோ (www.tamilvalarchithurai.org) பதிவிறக்கம் செய்து பெறலாம்.

தேர்வு செய்யப்படுபவர் களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் மற்றும் மருத்துவப்படி ரூ.100, கட்டணமில்லா பேருந்து சலுகை வாழ்நாள் முழுவதும் வழங்கப் படும். விண்ணப்பங்களை, தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல்தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை- 600 008 என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044- 28190412, 28190413 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x