Published : 03 Sep 2016 08:05 AM
Last Updated : 03 Sep 2016 08:05 AM

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு

திருவள்ளூர் மாவட்டம் அரிகியம்பேடு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை (56). இவரது மனைவி சித்ரா (41). ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அப்பகுதியில் உள்ள அப்பளம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 30-ம் தேதி இரவு 7 மணியளவில் நடந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த சித்ரா, பாடியநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ராய புரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சித்ரா மூளைச் சாவு அடைந்தார்.

அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர். இதையடுத்து டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்து அவரது உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதய வால்வு, கண்கள் மற்றும் தோலை எடுத்தனர்.

தோல் தானம்

கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த 2 நோயாளிகளுக்கு பொருத்தப் பட்டது. மற்றொரு சிறுநீரகம் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு பொருத்தப்பட்டது. கண்கள் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு வழங்கப் பட்டது. இதய வால்வு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிக்கு பொருத்தப்பட உள்ளது. மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கடந்த மாதம் 29-ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கப்பட்ட தோல் வங்கியில் தானமாக பெறப்பட்ட தோல் பதப் படுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனை தோல் வங்கிக்கு தோல் தானம் செய்த முதல் நபர் சித்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x