Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM

தெருக்களில் தூங்கும் ஆதரவற்றோர்களை கணக்கெடுக்கிறது சென்னை மாநகராட்சி

பனிக்காலங்களில் தெருக்களில் வசிக்கும் ஆதரவற்றோர் பலர் உயிர் இழப்பதை பிரதானமாக கருத்தில் கொண்டு,பெரு நகரங்களில் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான வீடு இல்லாத ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர் உறங்குவதை தவிர்க்க, நகரங்களில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு இரவு நேர காப்பகம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சி பகுதியில் 65 இரவு நேர காப்பகங்கள் அமைக்க மாநகராட்சி முடிவெடுத்தது.இது வரை மாநகராட்சி பகுதிகளில் 30 இரவு நேர காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 23 காப்பகங்கள் செயல்படுகின்றன. மற்ற 35 காப்பகங்களை வரும் பிப்ரவரி மாதத்துக்குள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதிதாக அமைக்கப்பட உள்ள மற்றும் ஏற்கெனவே அமைக்கப் பட்டுள்ள இரவு நேர காப்பகங்களில் தங்க வைப்பதற்காக, சாலை யோரங்களில் உறங்கும், வீடு இல்லாத ஏழை- எளிய, ஆத ரவற்றோர்களை கணக்கெடுக்கும் பணியை தொண்டு நிறுவனங்க ளோடு இணைந்து மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

அதன்படி, முதல்கட்டமாக, தண்டையார் பேட்டை, தேனாம் பேட்டை மண்டலப் பகுதிகளில் வெள்ளியன்று இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. மாலை முதல், நள்ளிரவு வரை மேற்கொள்ளப்படுகிற சாலை யோரத்தில் உறங்குபவர்களை கணக்கெடுக்கும் பணியில், தண்டையார்பேட்டை பகுதிகளில் தொண்டு நிறுவனங்களும், தேனாம் பேட்டை மண்டல பகுதிகளில் மாநகராட்சி பொதுசுகாதார துறையினரும் ஈடுபட உள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x