Published : 30 Nov 2013 12:00 AM
Last Updated : 30 Nov 2013 12:00 AM

செல்போனில் மின் கட்டண விவரம்

மின் கட்டண கணக்கீடு குறித்து, பயனீட்டாளர்களின் மொபைல் போனில் தகவல் தெரிவிக்க வசதியாக, மொபைல்போன் எண் மற்றும் ஈ-மெயில் முகவரிகளை பதிவு செய்யுமாறு, தமிழ்நாடு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு சென்னை மற்றும் கோவை மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

மின் பயன்பாடு கணக்கீடு மற்றும் கட்டண வசூலை எளிதாக்கும் வகையில் ஆன் லைன் கட்டண முறையையும், வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் கட்டணம் செலுத்தும் முறையையும், மின் வாரியம் அமலுக்கு கொண்டு வந்தது.

இந்நிலையில், மின் கணக்கீட்டு விவரங்களை, மொபைல் போனில் தெரிவிக்கும் முறை, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பரீட்சார்த்த முறையில், சென்னையில் அறிமுகமானது. தற்போது, தமிழகம் முழுவதும் இதை அமல்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

இதற்கு வசதியாக பயனீட்டா ளர்கள் மின்வாரிய கட்டண வசூல் மையங்களுக்கு நேரில் சென்று, மொபைல் போன் எண்களை பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்து, மின் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

வாடகைதாரர்களாக இருந்தா லும், அவர்கள் நேரடியாக மின் கட்டணம் செலுத்துவோராக இருந்தால், தங்களது மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய லாம். இதில், கட்டட உரிமையாளர் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

வாடகைதாரர் அல்லது குத்தகைக்கு எடுத்தவர்களின் மொபைல் போன் எண்ணைக் கொடுப்பதால், உரிமை யாளருக்கு எந்த சட்ட சிக்கலும் வராது. வேறு வாடகைதாரர் வந்தால், முந்தைய எண்ணை எளிதில் மாற்றிக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த இரு மாதங்களில், தமிழகம் முழுவதும் 13 சதவீதம் பேர் மொபைல் போன் எண்களை பதிவு செய்துள்ளனர். கோவை மண்டலத்தில் 40 சதவீதம் பேரும், சென்னை மண்டலத்தில் 26 சதவீதம் பேரும், ஈரோடு மண்டலத்தில் 18 சதவீதம் பேரும், மொபைல் போன் எண்களை பதிவு செய்தனர். மதுரை மற்றும் திருச்சி மண்டலங்களில் குறைந்த பட்சமாக முறையே ஐந்து மற்றும் எட்டு சதவீதம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு மாதத்தில், 50 சதவீதம் பேரின் மொபைல் போன் எண்களை திரட்ட மின்வாரிய அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளனர். அவர்களுக்கு அடுத்த மாதம் முதல் பி.எஸ்.என்.எல்., மூலம் குறுஞ்செய்தி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மொபைல் போன் எண்ணை பதிவதால் என்ன பயன்?

மொபைல் போன் எண்களை பதிவு செய்யும் பயனீட்டாளர்கள், மின் கணக்கீடு நேரத்தின் போது, வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மின் கட்டண கணக்கீட்டு அட்டையை, மீட்டருடன் வைக்க மறந்து போனாலும், அவருக்கான கட்டண விவரம், கடைசி தேதி மற்றும் பயனீட்டு அளவு குறுஞ்செய்தி மூலம், சம்பத்தப் பட்டவருக்கு அனுப்பப்படும்.

இதேபோல், ஆன் லைனில் தங்களது ஈ-மெயில் முகவரி மூலம் பணம் கட்டுவோருக்கு, ஈ-மெயிலிலும் தகவல்கள் அனுப்பப்படும் என்று அதிகாரி கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x