Published : 17 Apr 2014 12:00 AM
Last Updated : 17 Apr 2014 12:00 AM

கை காசு இழந்து விரக்தியில் தவிக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள்

பெரும்பாலான காங்கிரஸ் வேட்பாளர்கள் இதுவரை சுமார் 40 முதல் 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், கட்சித் தலைமையில் இருந்து வேட்பாளர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் மட்டுமே வந்துள்ளதால் காங்கிரஸ் வேட்பாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். மீதி பணம் வராவிட்டால், மாற்று கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தரவும் சிலர் முடிவு எடுத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் மூத்தத் தலைவர்கள் ஒதுங்கிக்கொண்ட நிலையில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் 25-க்கும் மேலானவர்கள் புது முகங்கள். வேட்பாளர்கள் தேர்வின்போது கட்சித் தலைமை சார்பில் தேர்தல் கமிஷன் அனுமதி அளித்த 70 லட்சம் ரூபாய் தேர்தல் செலவுக்காக அளிக்கப்படும். மேலும் 80 லட்சம் ரூபாய் ’தனி’யாக வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டதாம்.

மதுரை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், பெரம்பலூர் தொகு திகள் உட்பட பலரும் இதுவரை 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய் துள்ளதாக கூறப்படு கிறது. கட்சித் தலைமையிடம் இருந்து முதல் கட்டமாக 50 லட்சம் ரூபாயும், இரண்டாம் கட்டமாக 20 லட்சம் ரூபாயும், மூன்றாம் கட்டமாக கட்டத்தில் 80 லட்சம் ரூபாயும் வரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வேட்பாளர்களுக்கு வெறும் 20 லட்சம் ரூபாய் மட்டுமே வழங் கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.

அதுவும் குறிப்பிட்ட தொழில்புரியும் நபர்கள் வழியாக பணம் பட்டு வாடா செய்யப் பட்டதால் அவர்கள் இரண்டரை லட்சம் ரூபாயை கமிஷ னாக எடுத்துக்கொண்டு 17.5 லட்சம் ரூபாய் மட்டுமே வேட்பாளர்களிடம் கொடுத்ததாகத் தெரிகிறது. மேலும் மேற்கொண்டு பணம் தரப்படாது என்று சொல்லப்பட்டதால் பலரும் கைப்பணத்தை செலவுசெய்து விட்டு விரக்தியில் இருக்கின்றனர்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறும்போது, “ஞான தேசிகன் பதவியை காலி செய்ய நினைப்பவர்கள் காங்கிரஸ் தோற்க வேண்டும் என்று திட்டமிட்டு காய் நகர்த்துகின்றனர். அதனால் அவர் கள் கட்சி மேலிடத்தில், ‘வேட்பாளர் கள் யாரும் வேலை செய்ய வில்லை. தோல்வி அடைந்துவிடு வோம் என்று தெரிந்துவிட்டதால் பலர் பிரச்சாரத்துக்கே போக வில்லை’ என்று புகார் அனுப்பி யுள்ளனர்.

அதனால்தான், சொன்னதை விட மிகக் குறைந்த அளவு பணத்தை கட்சி மேலிடம் அனுப் பியுள்ளது. மீதமுள்ள தொகையை பட்டுவாடா செய்வதையும் கைவிட்டுள்ளது. மேற்கண்ட காரணங்க ளால்தான் கன்னியாகுமரிக்கு மட்டுமே பிரச்சாரத்துக்கு வர சோனியா முடிவு எடுத்துள்ளார். ராகுல் தமிழகத்துக்கு பிரச்சாரம் வராததற்கும் இதுவே காரணம்” என்றனர்.

இதற்கிடையே அதிருப்தியில் இருக்கும் வேட்பாளர்களை வளைக்க அதிமுக திட்டமிட்டுள்ள தாக அக்கட்சியினர் தெரிவிக்கின்ற னர். அதிருப்தியில் இருக்கும் காங் கிரஸ் வேட்பாளர்களை, ’நான் போட்டியில் இருந்து விலகி இருக் கிறேன்; எனது தொண்டர்கள் அதிமுக வேட்பாளரை ஆதரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று அறிவிப்பு செய்ய வைக்க அதிமுக வேக வேகமாக காய் நகர்த்துவதாகவும் சொல்லப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x