Published : 29 Aug 2016 12:51 PM
Last Updated : 29 Aug 2016 12:51 PM

கருணாநிதி சட்டப்பேரவைக்கு வந்தாலும் கண்ணியமாக வெளியே வர அதிமுகவினர் விடமாட்டார்கள்: துரைமுருகன்

கருணாநிதி சட்டப்பேரவைக்கு வந்தாலும் அவரை கண்ணியமாக வெளியே வர அதிமுகவினர் விடமாட்டார்கள் என்று துரை முருகன் விழுப்புரத்தில் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் விழுப்புரத்தில் திமுக பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான க.பொன்முடி தலைமை தாங்கி னார். மாவட்ட அவைத் தலைவர் ராதாமணி எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசிய தாவது: சட்டப்பேரவையில் எதிர்க் கட்சியும் இருந்தால் தான் அது ஜனநாயகம் எதிர்க்கட்சி என்றால் கேள்வி வாளைச் சுழற்றவும், ஆளும்கட்சி என்றால் பதிலால் கேடயமாக அதனை தடுக்கவும் வேண்டும். வெற்று அறிவிப்புகள் குறித்து நாங்கள் கேள்வி கேட்ட தால் எங்களை வெளியே அனுப்பி விட்டனர்.

சட்டப்பேரவைத் தலைவரின் நடவடிக்கையில் குறுக்கிடக் கூடாது என்கின்றனர். ஆனால் அவர் அப்படி நடந்து கொள்வதில்லையே. எதிர்க்கட்சித் தலைவரை குண்டுக் கட்டாக தூக்கி வந்து வெளியேற் றுவது ஜனநாயகமா? புகழுரை யால் பேரவை நேரம் வீணா கிறது. இதனை பேரவைத் தலைவர் தான் சரிசெய்ய வேண்டும்.

எப்படி நடந்து கொண்டாலும், இங்குள்ளவர்கள் ஓட்டு போடுவார் கள் என்ற எண்ணத்தில் அதிமுக செயல்படுகிறது. கடந்த ஆட்சி யின்போது கூட சட்டப் பேரவை யில் மரியாதை இருந்தது. இப்போது இவர்களுக்கு மரியாதை கொடுத்தால் ஏறி மிதிப்பார்கள் என்று ஆரம்பத்திலிருந்தே செயல் படாமல் அதிமுகவினர் தடுத்து வருகின்றனர்.

தான் தனியாக சட்டப்பேர வைக்கு வந்து பேசியதாக கூறிய முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி வருவதற்கு தைரியம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அவருக்கு 94 வயதாகிறது. அவர் உள்ளே வந்தாலும் அவரை அதிமுகவினர் கண்ணியமாக வெளியே வர விட மாட்டார்கள். சட்டப்பேரவை மரியா தைக்குரியதாக இல்லை. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியும் இருந்தால் தான் அது ஜனநாயகம் இல்லையெனில் அது சர்வாதிகார மாகிவிடும். திமுக தலைவர் கருணாநிதி யின் உடல் நிலையை வைத்து விமர் சனம் செய்யக்கூடாது.பேரவை நேரத்தை திமுக வீணடிக் கவில்லை. யாரையும் கேலி செய்யவில்லை மக்களுக்காகவே போராடுகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x