Last Updated : 25 Mar, 2017 10:10 AM

 

Published : 25 Mar 2017 10:10 AM
Last Updated : 25 Mar 2017 10:10 AM

இறால் குட்டைகளால் கடலோர கிராமங்கள் பாதிப்பு

கடலோர கிராமங்களில் உள்ள இறால் குட்டைகளால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரமும் பாதிக் கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், பரங்கிப் பேட்டை அருகே உள்ள பிச்சாவரம் பகுதியில் வங்கக் கடலை ஒட்டி சதுப்புநிலக் காடுகள் உள்ளன. உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு (சதுப்புநில காடு) இதுவாகும். பிச்சாவரம் காட் டுப் பகுதியின் பரப்பளவு 2,800 ஏக்கர். இப்பகுதி சிறுசிறு திட்டுகளுடன் நிறைந்து காணப்படுகிறது.

இதில் பூ நாரை, செங்கால் நாரை, சிறவி, பெரிய நீர் காக்கை, கொக்கு, உல்லான், உப்பு கொத்தி, மடையான், சிகப்பு வளைய பச்சை கிளி, புள்ளி புறாக்கள், உருந்து உல்லான் உள்பட 50-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. மேலும் நூற் றுக்கும் மேற்பட்ட மீன் இனங் களும், 30 வகையான நண்டு இனங் களும், 20 வகையான இறால் இனங் களும், சுமார் 86 வகையான தாவர இனங்களும் இந்த பிச்சாவரம் கழிமுக உப்பங்கழியில் உள்ளன. மேலும் இந்த சதுப்புநிலப் பகுதி யில் 52 வகையான பாக்டீரியாக் களும், 23 வகை பூஞ்சைகளும், 82 வகையான தாவர மிதவை உயிரி னங்களும், 22 வகை கடல் பாசி களும், 3 வகை கடல்புற்களும், 95 வகை விலங்கின மிதவை உயிரினங்களும், 40 வகை மண்ணில் புதைந்து வாழும் சிறிய உயிரினங் களும், 52 வகையான பெரிய உயிரி னங்களும் இருப்பதாக சூழலியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த அற்புதமான சுந்தரவனக் காடுகள் தற்போது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

இக்காட்டை சுற்றிலும் சுமார் 70-க்கும் மேற்பட்ட இறால் பண்ணை கள் உள்ளன. இதன் கழிவுநீர் இந்த சதுப்புநிலக் காடுகளையும் அதனைச் சுற்றி உள்ள கிராமங் களின் குடிநீர் ஆதாரத்தையும் அழித்து வருகிறது. இந்த இறால் பண்ணைகளால் விளைநிலங் கள் அனைத்தும் உப்பாக மாறி விட்டது. இதனால் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள் ளது. மேலும் இப்பகுதியில் உள்ள 100 கிராம மக்களின் வாழ்வாதாரமும் முடக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் உள்ள தெற்கு பிச்சாவரம், தாசோபேட்டை, திரு வாசலடி, குச்சிப்பாளையம், கிள்ளை பிள்ளுமேடு, சின்னவாய்க் கால், கிள்ளை பிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், ராதாவிளாகம் உள்ளிட்ட 15 இடங்களில் குடிநீர் குழாய்களில் எடுத்த நீர் மாதிரியை ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்ததில் அது குடிப்பதற்கு ஏற் றவை அல்ல என்று கூறப்பட்டுள் ளது.

மேலும் காடுகளில் இறால் குட்டைகளின் கழிவுநீர் கலப்பதால் அதில் உள்ள அரியவகை தாவர இனங்கள் மற்றும் பறவைகள், மீன், நண்டு உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் அழியும் நிலை ஏற் பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிள்ளையில் கடலோர மக்கள் வாழ் வுரிமை இயக்கம் சார்பில் விழிப்பு ணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 15 கடலோர கிராமங்களைச் சேர்ந்த 200 பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அதில், இறால் பண் ணையால் நிலத்தடி நீர் கடுமை யாக பாதிக்கப்படுகிறது. குடிநீர் பஞ்சம் ஏற்படுகிறது. மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக் கப்பட்டுள்ளது. இறால் பண்ணை களைத் தடை செய்ய கோரி போராட் டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்க ஒருங் கிணைப்பாளர் ரமேஷ்பாபு கூறுகை யில், ‘‘பிச்சாவரத்தின் காடுகளில் ஓடும் தண்ணீரை எட்டுக்கும் மேற் பட்ட செயற்கை கால்வாய்கள் மூலம் இறால் பண்ணைகளுக்குத் திருப்பி விடப்பட்டிருக்கிறது. இதற்காக பல இடங்களில் சதுப்புநில காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

செயற்கை கால்வாய்கள் மூலம் இறால் பண்ணைகளுக்குத் தண்ணீரை அனுப்புவது மட்டு மல்லாது, அதன் ரசாயன கழிவுகளை அதே காட்டுப் பகுதிக் குள் திருப்பி விடுகின்றனர். இத னால் இப்பகுதியில் உள்ள சதுப்புநில காடுகள் அழியும்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது.

இறால் பண்ணைகளை உடனடி யாக மூடவேண்டும். அதன் உரிமை யாளர்களுக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும். மேலும் இப்பகுதி கிராமங்களிலும் தரமான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதுகுறித்து விரைவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x