Last Updated : 23 Sep, 2014 11:29 AM

 

Published : 23 Sep 2014 11:29 AM
Last Updated : 23 Sep 2014 11:29 AM

பெண்கள், குழந்தைகளுக்கான யமஹாவின் ஹெல்மெட்

இரு சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள யமஹா நிறுவனம் இப்போது பெண்கள், குழந்தைகளுக்கான ஹெல்மெட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை ரூ. 990 முதல் ரூ. 1,380 ஆகும். டெல்லியில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய் பவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓட்டுபவர் தவிர பயணம் செய்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.

இந்த கட்டாய சட்டம் வரவேற்கத்தக்கது என்ற போதிலும் பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்ற ஹெல்மெட் கிடைப்பது கடினமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்ற ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியுள்ளதாக யமஹா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுத் துணைத் தலைவர் ராய் குரியன் தெரிவித்தார்.

யமஹா மோட்டார் இந்தியா இத்தகைய ஹெல்மெட்டை தயாரித்துள்ளது. இவை ஐஎஸ்ஐ சான்று பெற்றவையாகும்.குழந்தைகளுக்கும் ஹெல் மெட் மிகவும் அவசியம் என்பதால் குழந்தைகளும் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளதாக குரியன் தெரிவித்தார். இந்த ஹெல்மெட் அனைத்து யமஹா விற்பனை யகங்களிலும் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x