Published : 28 Jun 2019 07:00 PM
Last Updated : 28 Jun 2019 07:00 PM

தமிழகத்தில் 61 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: முழுப் பட்டியல்

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 61 பேரை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கான உத்தரவை உள்துறைசெயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

மாற்றப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் முன்பு வகித்த பதவி விவரத்துடன் புதிய பதவி விவரம்:

1. மாநில குற்ற ஆவண காப்பக ஐஜி சஞ்சய் மாத்தூர் கூடுதல் டிஜிபியாக பணி உயர்த்தப்பட்டு மத்திய அரசின் அயல் பணிக்காக செல்கிறார்.

2. விடுப்பில் இருந்த டிஐஜி தீபக் தாமோர் பதவி உயர்த்தப்பட்டு விடுப்பிலேயே தொடர்கிறார்.

3. இந்தோ திபெத் எல்லை காவல் படையின் டிஐஜியாக அயல் பணியில் பணியாற்றும் அனிஷா உசேன் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பணியில் தொடர்கிறார்

4. குடியேற்றப் பிரிவில் அயல்பணியில் எஸ்பியாக கேரளாவில் பணியாற்றும் நரேந்திரன் நாயர் டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பிரிவில் தொடர்கிறார்.

5. சிபிஐ லஞ்ச ஒழிப்புத் துறை அயல்பணியில் எஸ்பியாக பணியாற்றும் விஜயேந்திர பிதாரி டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பணியில் தொடர்கிறார்.

6. தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10-வது பட்டாலியன் கமாண்டன்ட் மனோகர் சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

7. கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன் பூக்கடை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

8. பூக்கடை துணை ஆணையர் அரவிந்தன் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி ஆக மாற்றப்பட்டுள்ளார்

9. திருவள்ளூர் மாவட்ட எஸ்பி பொன்னி சென்னை லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

10. லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி கண்ணம்மாள் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

11. நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு எஸ்பி நாகஜோதி மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

12. சென்னை மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர் செந்தில்குமார் சென்னை காவல் ஆணையரக நிர்வாக துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

13. சென்னை காவல் ஆணையரக நிர்வாக துணை ஆணையர் ஜெயலட்சுமி மயிலாப்பூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

14. மயிலாப்பூர் துணை ஆணையர் மயில்வாகனன் சென்னை போக்குவரத்து காவல் (தெற்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

15. சென்னை போக்குவரத்து காவல் (தெற்கு) துணை ஆணையர் சாமிநாதன் நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

16. நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் பிரபாகர் பரங்கிமலை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

17. பரங்கிமலை துணை ஆணையர் முத்துசாமி அண்ணாநகர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

18. அண்ணாநகர் துணை ஆணையர் டாக்டர் சுதாகர் சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

19. சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் விமலா வணிக குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்பி-ஆக மாற்றப்பட்டுள்ளார்.

20. சென்னை மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர் மல்லிகா சிபிசிஐடி எஸ்பி ஆக மாற்றப்பட்டு உள்ளார்.

21. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி பாண்டியராஜன் கரூர் மாவட்ட எஸ்பி ஆக மாற்றப்பட்டு உள்ளார்.

22. கரூர் மாவட்ட எஸ்பி விக்ரமன் சென்னை கணினி மயமாக்கல் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

23. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி டி.கே. ராஜசேகரன் நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி ஆக மாற்றப்பட்டுள்ளார்

24. நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி விஜயகுமார் சென்னை சிபிசிஐடி எஸ்பி ஆக மாற்றப்பட்டுள்ளார்.

25. செக்யூரிட்டி சென்னை போலீஸ் துணை ஆணையர் சிவகுமார் சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

26. சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்பி ஸ்டாலின் மதுரை,உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

27. சென்னை தலைமையிட துணை ஆணையர் சரவணன் திருநெல்வேலி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

28. திருநெல்வேலி நகர துணை ஆணையர் சாம்சன் சென்னை டிஜிபி அலுவலகம் உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரலாக மாற்றப்பட்டுள்ளார்.

29. சென்னை டிஜிபி அலுவலக உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் மகேஸ்வரன் ரயில்வே எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

30. சென்னை ரயில்வே எஸ்பி லோகநாதன் சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆக மாற்றப்பட்டுள்ளார்.

31. சிவகங்கை மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன் தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆறாவது பட்டாலியன் மதுரை கமாண்டன்ட் ஆக மாற்றப்பட்டுள்ளார்.

32. தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆறாவது பட்டாலியன் மதுரை கமாண்டன்ட் சுகுமாரன் மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

33. மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் அருண் பாலகோபாலன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆக மாற்றப்பட்டுள்ளார்.

34. சென்னை போக்குவரத்து கழக தலைமை விஜிலென்ஸ் அலுவலர் ஜெயஸ்ரீ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

35. நெல்லை மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா சென்னை போக்குவரத்து காவல்(கிழக்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

36. சென்னை போக்குவரத்து காவல்(கிழக்கு)  துணை ஆணையர் ஸ்ரீஅபிநவ் கடலூர் மாவட்ட எஸ்பி-ஆக மாற்றப்பட்டுள்ளார்.

37. கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன் எஸ்.எஸ்.டி எஸ்பி ஆக மாற்றப்பட்டுள்ளார்.

38. எஸ்.எஸ்.சி எஸ்பி கண்ணன் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி ஆக மாற்றப்பட்டுள்ளார்.

39. சிறப்பு சிபிசிஐடி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு(ஒசிஐயு) எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

40. சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு(ஒசிஐயு) எஸ்பி மகேஷ்குமார் நெல்லை மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

41. சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்து துறை போக்குவரத்து காவல் துணை ஆணையர் சி.சியாமளாதேவி சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

42. சென்னை போக்குவரத்து காவல் துணை ஆணையர் பகலவன் அடையாறு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

43. அடையாறு துணை ஆணையர் செஷாங் சாயி சைபர் பிரிவு எஸ்பி-1 ஆக மாற்றப்பட்டுள்ளார்.

44. லஞ்ச ஒழிப்பு (மேற்கு பிரிவு) எஸ்பி லட்சுமி சென்னை போக்குவரத்து காவல் (மேற்கு) பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

45. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி ரம்யா பாரதி சென்னை, போதைப்பொருள் கடத்தல் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

46. சென்னை மனித உரிமை ஆணைய எஐஜி-ஆக பணியாற்றிய சுப்புலட்சுமி வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

47. வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் கலைச்செல்வன் நீலகிரி மாவட்ட எஸ்பி ஆக மாற்றப்பட்டுள்ளார்.

48. நீலகிரி மாவட்ட எஸ்பி சண்முகப்பிரியா சைபர் பிரிவு எஸ்பி-2 ஆக மாற்றப்பட்டு உள்ளார்.

49. நாகப்பட்டினம் சப் டிவிஷன் ஏஎஸ்பி பத்ரி நாராயணன் மாமல்லபுரம் சப் டிவிஷன் ஏஎஸ்பி ஆக மாற்றப்பட்டுள்ளார்.

50. கோவை காவலர் தேர்வு பள்ளி ஏஎஸ்பி கேபிஎஸ் ஜெயச்சந்திரன் எஸ்பி ஆக பணி உயர்த்தப்பட்டு தமிழ்நாடு காவலர் பயிற்சி அகாடமியின் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

51. சிபிசிஐடி விழுப்புரம் ஏஎஸ்பி செந்தில்குமரன் எஸ்பி-ஆக பதவி உயர்த்தப்பட்டு மாநில மனித உரிமை ஆணையம் (சென்னை) எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

52. கிருஷ்ணகிரி காவல் தலைமையிடம் ஏஎஸ்பி மோகன்ராஜ் எஸ்பி ஆக பதவி உயர்த்தப்பட்டு லஞ்ச ஒழிப்பு துறை (மேற்கு பிரிவு) எஸ்பியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

53. சென்னை உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பிரிவு ஏஎஸ்பி ஸ்ரீதர் பாபு எஸ்பியாக பதவி உயர்த்தப்பட்டு உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு எஸ்பியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

54. வேலூர் காவலர் தேர்வு பள்ளி ஏஎஸ்பி வீரராகவன் எஸ்பி ஆக பதவி உயர்த்தப்பட்டு சென்னை சைபர் பிரிவு எஸ்பி-3 ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

55. சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஏஎஸ்பி வெங்கடாசலபதி எஸ்பி ஆக பதவி உயர்த்தப்பட்டு தமிழ்நாடு சிறப்பு காவல்படை 10-வது பட்டாலியன் உளுந்தூர்பேட்டை கமாண்டன்ட் ஆக மாற்றப்பட்டுள்ளார்.

56. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏஎஸ்பி அசோக்குமார் எஸ்பி ஆக பதவி உயர்த்தப்பட்டு சென்னை, தலைமையிட துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

57. கோவை தலைமையிட ஏஎஸ்பி மாடசாமி எஸ்பி ஆக பதவி உயர்த்தப்பட்டு சென்னை சிறப்பு எஸ்பிசிஐடி எஸ்பி ஆக மாற்றப்பட்டுள்ளார்.

58. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏஎஸ்பி சுதர்சன் எஸ்பி ஆக பதவி உயர்த்தப்பட்டு செக்யூரிட்டி சென்னை போலீஸ் துணை ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

59. மதுவிலக்கு அமல் பிரிவு சேலம் ஏஎஸ்பி செந்தில் எஸ்பி ஆக பதவி உயர்த்தப்பட்டு சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

60. சிறப்பு பிரிவு எஸ்பிசிடி சென்னை ஏஎஸ்பி பி.கே.ராஜேந்திரன் எஸ்பி ஆக பதவி உயர்த்தப்பட்டு மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

61.பெரம்பலூர் மாவட்ட தலைமையிட ஏஎஸ்பி ரங்கராஜன் எஸ்பி-ஆக பதவி உயர்த்தப்பட்டு மாநில மனித உரிமை ஆணைய உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x