Published : 01 Sep 2018 11:55 PM
Last Updated : 01 Sep 2018 11:55 PM

இன்று கிருஷ்ண ஜெயந்தி; முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

பகவத்கீதை போதித்த வழிப்படி மக்கள் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் கே.பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி இன்றுநாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

பகவத் கீதை மூலம் மனித வாழ்க்கையின் நெறியினை உலகுக்கு உணர்த்திய  பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவத

ரித்த திருநாளான கிருஷ்ண ஜெயந்தி திருநாளைக் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை  மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கிருஷ்ண ஜெயந்தி திருநாளில், பகவத் கீதை போதித்த கடமையின் சிறப்பையும், பயன் கருதாப் பணியின் உயர்வையும் மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, கடமை உணர்வுடனும், மகிழ்வுடனும் வாழ வேண்டுமென்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது  மனமார்ந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்

பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:

எளியோரின் தேவைகள் அனைத்தும் அன்புடன் பரிசீலிக்கப்பட்டு அவர்களது தேவைகள்  நிறைவேற்றப்பட வேண்டும் என்பது கண்ணனின் போதனைகள். அதுவே இந்த கிருஷ்ணர் பிறந்த நாள் செய்தியாக இருக்க முடியும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

மத்திய இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன்: பகவான்  கிருஷ்ணனின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைத்திடவும்  மனமார பிரார்த்திக்கிறேன். தர்மத்தை காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உற்ற துணையாக நின்று அறவழியில் அவருடன் பயணிக்க நாமும்  உறுதி கொள்வோம். அனைவருக்கும் என் மனமார்ந்த  கிருஷ்ணா ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்”.

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:

பகவான் மகாவிஷ்ணு கிருஷ்ணராக, தீமையின் வடிவமான கம்சனை வீழ்த்திட அவதரித்த திருநாளை  கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாடு யாதவர்  பேரவைத் தலைவர் ஜி.கண்ணன்: தர்மமே கண்ணனாகப் பிறந்து,குருஷேத்திரப் போரை நிகழ்த்தி அதர்மத்தை அழித்து, தர்மத்தின் வழியில் வாழும் வாழ்வே மகத்தானது என்பதை கிருஷ்ணாவதாரத்தில் வாழ்க்கை நெறியை புரியவைத்தான் கண்ணன். கீதை நாயகன் யாதவக் கண்ணன் அவதரித்த நாளை  கிருஷ்ண  ஜெயந்தியாகக் கொண்டாடி மகிழும் உலக மக்களுக்கு எனது  கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x