Published : 25 Sep 2018 09:08 AM
Last Updated : 25 Sep 2018 09:08 AM

அறிவாலயம் எதிரே நிறுத்தப்பட்ட திமுகவினரின் வாகனங்களால் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் வேதனை

அண்ணா அறிவாலயம் எதிரே நிறுத்தப்பட்ட திமுகவினரின் வாக னங்களால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவா லயம் உள்ளது. இங்கு நேற்று திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்து தேர்தல் நிதியை தலைமைக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து பேருந்துகள், கார்கள் மூலம் சென்னைக்கு நேற்று காலை வந்தனர்.

வந்தவர்களின் பெரும்பாலான கார்கள் அறிவாலயத்தின் எதிரே அண்ணாசாலை ஓரம் நிறுத்தப் பட்டது. 15-க்கும் மேற்பட்ட கார்களும், சுமார் 25 பேருந்துகளும் அண்ணாசாலை ஓரமும், அறிவாலயத்தின் எதிரே யும் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டன. இதனால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கினர்.

நெரிசலை ஒழுங்குபடுத்தக் கூட அங்கு போக்குவரத்து போலீஸார் போதிய அளவில் இல்லை. ஒரே ஒரு போக்குவரத்துக் காவலர் மட்டும் அறிவாலயம் எதிரே நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

வெளியூர்களில் இருந்து வந்த திமுக தொண்டர்கள் சாலையை எப்போதும் கடந்த வண்ணம் இருந் தனர். இதனால், அந்த வழியாக போக்குவரத்திலும் தடங்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து சைதாப்பேட்டை யில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வரும் எழும்பூரைச் சேர்ந்த குமரேசன் (28) கூறியபோது, ‘‘தினமும் இந்த வழியாகத்தான் பைக்கில் செல்கிறேன். ஆனால், இன்று வழக்கத்தை விட கடுமை யான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதற்கு திமுக தொண்டர்கள் தங்களின் வாகனங் களை சாலையோரம் நிறுத்தியதே காரணம். இப்படி நிறுத்த போக்கு வரத்து போலீஸார் அனுதிக்கக் கூடாது" என்றார்.

ஸ்கூட்டியில் அந்த வழியாகச் சென்ற ஸ்டெல்லா ரேகா (25) கூறும்போது, "கிண்டியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். விரைவில் சென்று விடலாம் என நினைத்தேன். இங்கு இருக்கும் நெரிசலை பார்த் தால் நீண்ட நேரமாகும் போலிருக் கிறது. யாராக இருந்தாலும் தேவை இல்லாமல் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதை அனு மதிக்க கூடாது. கட்சிக்காரர்கள் என்றால் அவர்களின் வாகனத்தை அவர்களின் அலுவலகத்துக்குள் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் போக்குவரத்துக்கு இடை யூறு இல்லாத இடத்தில் நிறுத்த வேண்டும். அப்போதுதான் யாருக் கும் எந்த தொந்தரவும் இருக்காது" என்றார்.

பரங்கிமலையில் இருந்து சிந்தா திரிப்பேட்டை நோக்கி பைக்கில் சென்ற சாஜஹான் (45) கூறும் போது, "கட்சிக்காரர்கள் என்றால் தங்களது வாகனங்களை மெரினா கடற்கரை ஓரம் நிறுத்த வேண்டியது தானே? அல்லது அவர்களது அலு வலகத்துக்குள் நிறுத்த வேண்டும். இப்படி சாலையோரம் நிறுத்தி நெரிசலை ஏற்படுத்தக் கூடாது. இதே போன்று வேறு யாராவது சாலையோரம் நிறுத்தி இருந்தால் போக்குவரத்து போலீஸார் வாக னத்தை அற்புறப்படுத்தி இருப்பார் கள். அல்லது அபராதம் விதித்திருப் பார்கள். கட்சிக்கார்கள் என்பதால் போக்குவரத்து போலீஸார் கூட அவர்களை கண்டு கொள்ள வில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனி இதுபோல் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x