Published : 15 Sep 2018 08:00 AM
Last Updated : 15 Sep 2018 08:00 AM

750-வது அவதார உற்சவத்தை முன்னிட்டு மயிலை ஸ்ரீவேதாந்த தேசிகருக்கு ரூ.20 லட்சத்தில் தங்க சிம்மாசனம்

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ் தானத்தில், அவரது 750-வது திரு அவதார மகோற்சவத்தை முன் னிட்டு தங்க சிம்மாசனம் காணிக் கையாக வழங்கப்பட்டுள்ளது.

வைணவ சமயப் பெரியவர் களில் ஒருவரான ஸ்ரீ வேதாந்த தேசிகர் கி.பி. 1268-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தூப்புல் என்னும் இடத்தில் திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாகப் பிறந்த தத்துவ வித்தகர் ஆவார். ஸ்வாமி தேசிகன், தூப்புல் நிகமாந்த தேசிகன், தூப்புல் பிள்ளை, உபய வேதாந்தாச்சாரியார், கவிதார்க்கிக ஸிம்மம், ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் என பல பெயர்களால் போற்றப்படும் இவரது 750-வது ஆண்டு நிறைவு தற்போது கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை மயிலாப்பூர் கேசவப் பெருமாள் சன்னதியில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்துக்கு ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீபாதம் கைங்கர்ய அசோசியேஷன் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க சிம் மாசனம் காணிக்கையாக வழங் கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் 70-வது ஆண்டு மற்றும் ஸ்ரீ வேதாந்த தேசிகரின் 750-வது ஆண்டை முன்னிட்டு இந்த காணிக்கை வழங்கப்பட்டுள்ளது. 642 கிராம் தங்கத்தைக் கொண்டு இந்த சிம்மாசனம் உருவாக்கப் பட்டுள்ளது.

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் 750-வது திரு அவதார மகோற்சவத்தை முன்னிட்டு, பல்வேறு வைணவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு கள் நடத்தப்பட்டு வருகின்றன. மயிலை ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் நேற்று காலை கருட வாகனத்தில் திருமயிலை திருவேங்கடமுடையானும், எதிரே தூப்புல் திருவேங்கடமுடையானும் நாலாயிர திவ்யப்பிரபந்த கோஷ்டி மற்றும் வேதபாராயண கோஷ்டி யுடன் திருவீதிகளில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

நங்கநல்லூர்

சென்னை நங்கநல்லூர் ஸ்ரீ லட்சுமி ஹயவதன பெருமாள் கோயிலில் ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகரின் 750-வது திருஅவதார வார்ஷிக மகோற்சவம் கடந்த 12-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, பெருமாள் நேற்று கருட வாகனத்திலும், சுவாமி தேசிகர், கேடயத்திலும் வீதிஉலா வந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x