Published : 18 Sep 2018 10:04 AM
Last Updated : 18 Sep 2018 10:04 AM

கல்பாக்கம், புதுப்பட்டினம் பகுதிகளில் மின்வெட்டு: மின்வாரியம் மீது மக்கள் குற்றச்சாட்டு

மின்வாரியத்தின் அலட்சியத்தால் புதுப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதி களில் மின்வெட்டு தொடர் வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கல்பாக்கம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், மெய்யூர் பகுதி களில் காற்றுடன் லேசான மழை பெய்தால் கூட உடனடியாக மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது. மழை நின்ற பிறகும் நீண்ட நேரத் துக்கு மின்வெட்டு நீடிப்ப தால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வரு கின்றனர்.

முன்னேற்பாடு இல்லை

மேலும், மழைக் காலத்துக்கான உரிய முன்னேற்பாடுகளை மின்சார வாரியம் மேற்கொள்ளாததே தொடர் மின்வெட்டுக்குக் காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து புதுப்பட்டினம் வணிகர் சங்க துணைத் தலை வர் கிங் உசேன் கூறியதாவது:

ஆரம்பாக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப் புப் பணி எனக் கூறி அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஆனால், சிறிய அளவில் மழை பெய்யும் போதே மின்சாரம் துண்டிக் கப்படுகிறது.

புதுப்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு லேசான மழைபெய்தது. உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. சுமார் 7 மணி நேரத்துக்குப் பிறகுதான் மின்விநியோகம் செய்யப்பட்டது.

இதுபோல், அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதால் வியாபாரிகள் பல்வேறு வகையில் பாதிக்கப்படு கின்றனர். சதுரங்கப்பட்டினம் உதவி பொறியாளரிடம் முறையிட் டால், பழுது ஏற்படுவதாகத் தெரிவிக்கிறார்.

அப்படியெனில், மாதாந்திர பராமரிப்புப் பணியின்போது பழுதுகளை சரிபார்ப்பதில்லையா? அல்லது அறிவிக்கப்படாத மின் வெட்டு செய்யப்படுகிறதா என தெரியவில்லை. மேலும், மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், பராமரிப்புப் பணிகளை மின்வாரியம் இன்னும் மேற்கொள்ளவில்லை என்றார்.

இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் மின்சார வாரிய உதவி பொறியாளர் வினோத் கூறியதாவது:

மின்கம்பம் சாய்ந்தது

புதுப்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் காற்றுடன் மழைபெய்ததில், ஈகை கிராமத்தில் மின்கம்பம் ஒன்று சாய்ந்தது.

இதனால், மின்சாரம் நிறுத் தப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக மின்வெட்டு ஏற்பட்டது.

மேலும், மழைக் கால முன்னேற்பாடுகள் மேற்கொள் ளப்படவில்லை எனக் கூறுவது ஏற்புடையதல்ல.

மின்வாரிய ஊழியர்கள் தேவையான முன்னேற் பாடுகளை தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x