Published : 28 Sep 2018 08:06 AM
Last Updated : 28 Sep 2018 08:06 AM

பெரிய கோயிலின் கட்டுமான ஆதாரம் குறிப்பிடப்பட்டுள்ள தஞ்சாவூர் தாமிரப் பட்டயம் நெதர்லாந்திலிருந்து மீட்கப்படும்: பொது நல வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்

தஞ்சாவூர் பெரிய கோயில் எப்படிக் கட்டப்பட்டது என்பதற் கான ஆதாரம் குறிப்பிடப்பட்டுள்ள தஞ்சாவூர் தாமிரப் பட்டயம், நெதர்லாந்து நாட்டின் மியூசியத் திலிருந்து விரைவில் மீட்கப்படும் என பொது நல வழக்கறிஞரும் சிலை கடத்தல் வழக்குகளில் ஆஜராகி வருபவருமான யானை ஏ.ராஜேந்திரன் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

நாகை மாவட்டம் கீவளூரை அடுத்துள்ள செம்பியன்மாதேவி கிராமத்தில் ராஜேந்திர சோழன் தன் பாட்டியின் நினைவாக கைலாச நாதர் கோயிலைக் கட்டி, அதில் செம்பியன் மாதேவியின் ஐம் பொன் சிலையை மூன்றரை அடி உயரத்தில் அமைத்தார்.

பல ஆண்டுகளுக்கு முன் அந்த சிலை மாயமாகிவிட்டது. அதன் பிறகு, 1959-ம் ஆண்டு வாக்கில் கோயில் திருப்பணியின்போது புதிதாக செம்பியன் மாதேவி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கைலாசநாதர் கோயிலில் காணா மல்போன செம்பியன் மாதேவி ஐம்பொன் சிலை அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் ஆர்ட் கேலரி ஒன்றில் உள்ளது. இந்தச் சிலையை மீட்க வேண்டும் என வேளாங் கண்ணி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளேன். மேலும், இதுதொடர்பாக உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள விசாரணை நீதிமன்றத் தில் செம்பியன் மாதேவி சிலை தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பித்து விரைவில் அதை இந்தியாவுக்கு மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, தஞ்சாவூர் பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது என் பதற்கான ஆதாரம் குறிப்பிடப் பட்டுள்ள தஞ்சாவூர் தாமிரப் பட்ட யங்கள் ராஜராஜ சோழன் காலத் தில் வெளியிடப்பட்டன. மேலும், அந்த தாமிரப் பட்டயங்களின் தொகுப்பில் சோழர்களின் ராஜ முத்திரையும் குறிப்பிடப்பட்டிருந் தது. இந்த தஞ்சாவூர் தாமிரப் பட் டயங்களும், முத்திரையும் தற்போது நெதர்லாந்து நாட்டில் உள்ள ஒரு மியூசியத்தில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அங்கோர்வாட், போபாலில்...

அவற்றை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தால், தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டுமானம் குறித்த அக்கால தொழில்நுட்ப ரகசியத்தை நாம் தெரிந்துகொள்ள முடியும். இந்தியா மற்றும் நெதர்லாந்து அரசுகளின் ஒத்துழைப்புடன் அவற்றை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

கம்போடியாவில் அங்கோர் வாட்டில் உள்ள விஷ்ணு கோயி லில் முருகன், புத்தர் உள்ளிட்ட ஏராளமான சிலைகள் உள்ளன. அங்கு சோழர் கால பட்டயங்கள், கல்வெட்டுகள் உள்ளன. அவற்றை யும் மீட்க இந்திய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள போத்தி மகாராஜாவால் நிறுவப்பட்ட சரஸ்வதி தேவியின் மார்பிள் சிலை தற்போது இங்கிலாந்து மியூசியத்தில் உள்ளது. அதையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.செம்பியன்மாதேவி கிராமத்தில், ராஜேந்திர சோழன் தன் பாட்டியின் நினைவாக கைலாசநாதர் கோயிலைக் கட்டி, அதில் செம்பியன்மாதேவியின் ஐம்பொன் சிலையை அமைத்தார். இந்த சிலை வாஷிங்டன் நகரில் ஆர்ட் கேலரி ஒன்றில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x