Published : 22 Sep 2018 09:02 AM
Last Updated : 22 Sep 2018 09:02 AM

மின்தேவை குறைந்ததால் உற்பத்தி குறைப்பு;  தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை- மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

``தமிழகத்தில் மின்சார தேவை குறைந்ததன் காரணமாகவே அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. மின் வெட்டு எங்குமில்லை” என தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

தூத்துக்குடி அனல்மின் நிலை யத்தை, நேற்று ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

தூத்துக்குடி அனல்மின் நிலை யத்தில் 1.02 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது. இங்கு தினமும் 16 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. எனவே, ஆறரை நாட் களுக்கு தேவையான நிலக்கரி இருப்பில் உள்ளது. வரும் 25-ம் தேதி ஒரு கப்பலில் நிலக்கரி வரவுள்ளது.

தமிழகத்தில் இன்று (நேற்று) காலை நிலவரப்படி சூரியசக்தி மின்சாரம் 1,400 மெகாவாட், நீர் மின்சாரம் 2,000 மெகா வாட், காற்றாலை 3,000 மெகாவாட் உற்பத்தி உள்ளது. இவ்வளவு மின்சாரம் உற்பத்தி யாவதாலும், மின்சாரம் தேவை யில்லை என்பதாலும், அனல்மின் நிலையங்களில் உற்பத்தியை குறைத்துள்ளோம். வடசென்னை, மேட்டூர் அனல்மின் நிலையங்களி லும் போதுமான நிலக்கரி கையிருப்பு உள்ளது.

மத்திய அரசும் நாங்கள் கேட்ட படி கடந்த 3 நாட்களாக 16 வேகன் களில் நிலக்கரி அனுப்புகிறது. மேலும், 6 லட்சம் டன் நிலக்கரி வெளிநாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு அக்டோபர் மாதம் வரும்.

மின் மிகை மாநிலம்

தமிழகத்தில் எங்கேயும் மின்வெட்டு கிடையாது. மின் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகம் மின் மிகை மாநிலமாக இருக்கிறது. மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு 6,152 மெகாவாட் மின்சாரம் வரவேண்டும். 3,300 மெகாவாட்தான் வந்தது. தற்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 500 மெகாவாட் வரத்து குறைந்துவிட்டது. இருந் தாலும் மின்வெட்டு இல்லாமல் வைத்திருக்கிறோம்.

இந்த் பாரத் நிறுவன வழக்கு

காற்றாலை மின்சாரம் கொள் முதலில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார். எந்த காற்றாலைக்கு நாங்கள் பணம் கொடுத்திருக்கிறோம் என்பதை அவர் சொல்லட்டும்.

இந்த் பாரத் என்ற அனல்மின் நிறுவனம் அரசுக்கு ரூ.9.17 கோடி தர வேண்டும். 22 சதவீத வட்டியோடு ரூ.11.78 கோடி வர வேண்டும் என்பதற்காக அரசுதான் நோட்டீஸ் அனுப்பி, உயர் நீதிமன்றத்தில் அவர்கள் தடையாணை பெற்று, தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது. இதை சரியாக புரிந்து கொள்ளாமல் ஸ்டாலின் தொடர்ந்து தவறான தகவலை கூறி வருகிறார்.

திருச்செந்தூர் அருகே உடன் குடியில் நிலக்கரி இறங்குதளம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள் ளோம். இதுபோன்ற போராட்டங் களை எதிர்க்கட்சிகள் தூண்டி விடாமல், எதிர்கால மின் திட்டங் களை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும்.

புதிய அனல்மின் நிலையங்கள்

தமிழகத்தில் கூடுதலாக 4,000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையங்களை 2022-ம் ஆண்டுக்குள் கொண்டு வருவோம்.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தையும் புதுப்பிக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அனல்மின் நிலைய தலைமைப் பொறியாளர் நடராஜன், தமிழ்நாடு மின்சார வாரிய தூத்துக்குடி கண் காணிப்பு பொறியாளர் விஜயசங்கர பாண்டியன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x