Published : 24 Sep 2018 08:22 AM
Last Updated : 24 Sep 2018 08:22 AM

ஸ்டெர்லைட் ஆலையில் 2 மணி நேரம் ஆய்வு; மக்களிடம் கருத்து கேட்ட தேசிய பசுமை தீர்ப்பாய குழு: ஆதரவு - எதிர்ப்பாளர்கள் மோதலால் பரபரப்பு

தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த குழுவினர் நேற்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். மனுக்கள் பெறும் நிகழ்வின்போது ஸ்டெர்லைட் ஆதரவாளர்களை ஆலை எதிர்ப்பாளர்கள் அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்வதற்காக மேகாலயா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக் கான அமைச்சக விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசுகட்டுப் பாட்டு வாரிய மண்டல இயக்குந ரக முதுநிலை சுற்றுச்சூழல் பொறி யாளரும், விஞ்ஞானியுமான வரலட் சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு தனது ஆய்வை நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது தூத்துக்குடி மாவட் டம் புதுக்கோட்டை உப்பாற்று ஓடை அருகே கொட்டப்பட்டுள்ள தாமிரக் கழிவுகளை பார்வையிட்ட னர். 2-வது நாளான நேற்று காலை 8.30 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று ஆய்வு செய்த னர். ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். காலை 10.30 மணி வரை ஆய்வு நடைபெற்றது.

பின்னர் டி.குமாரகிரி கிராமத்தில் உள்ள குளத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அ.குமரெட்டியாபுரம் கிராமத்துக்கு சென்று மக்களிடம் கருத்து கேட்டனர். ஸ்டெர்லைட் அலுவலர் குடியிருப்பில் ஆலை ஊழியர்களிடமும் மனுக்கள் பெற்றனர்.

ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

தொடர்ந்து தூத்துக்குடி அர சினர் பாலிடெக்னிக் கல்லூரி கூட்ட அரங்கில் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தனர். அப் போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், ஆதரவாகவும் மனு கொடுக்க வந்தவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்டெர் லைட்டுக்கு ஆதரவாக மனு கொடுக்க வந்த சிலரை, எதிர்ப்பாளர் கள் அடித்து விரட்டினர். இதனால் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பலர் மனு கொடுக்க முடியாமல் திரும் பிச் சென்றனர். போலீஸாரும் அவர்களை மனு கொடுக்க அனுமதிக்காமல் வேறு பாதை வழியாக வெளியேற்றினர்.

அதிமுக, திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அமைப்பினர் மனு அளித்தனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அனைவரும் மனு கொடுத்துவிட்டு வெளியே சென்ற பிறகு, ஆதரவு தரப்பினர் சிலர் மட்டும் வந்து மனு அளித்துவிட்டு சென்றனர்.

குழுவின் தலைவர் தருண் அகர் வால் செய்தியாளர்களிடம் கூறியதா வது: ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியுள்ளோம். தொடர் ந்து பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றுக் கொண்டோம். சுமார் 2000-க்கும் அதிகமான மனுக் கள் வந்திருக்கலாம் என நினைக்கி றோம். பெரும்பாலான வர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண் டும் என்று மனு கொடுத்துள்ளனர்.

இன்று (செப்.24) சென்னை யில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஸ்டெர் லைட் வழக்கின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் மனுக்கள் அளிக்கலாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் அறிக்கையை சமர்ப்பிப்போம். தேவைப்பட்டால் மீண்டும் தூத்துக் குடி வருவோம் என்றார் அவர்.

முறையான ஏற்பாடு இல்லை

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர் பாக ஆதரவு மற்றும் எதிர்ப்பு தரப்பினர் மனு கொடுக்க வருவார் கள் எனத் தெரிந்திருந்தும் போலீ ஸார் எந்தவித முன்னேற்பாடு களும் செய்யவில்லை. இரு தரப்பினரும் கூடிய இடத்தில் மிக குறைந்த எண்ணிக்கையில்தான் போலீஸார் இருந்தனர். அதனால் தான் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சிலர் தாக்கப்பட்டனர் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மீண்டும் கருத்து கேட்பு கூட்டத்துக்கு கோரிக்கை

ஸ்டெர்லைட் ஆலை அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ்.டி.பொன்ராஜ், விவசாய சங்கத் தலைவர் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் தூத்துக்குடியில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் எங்களது கருத்துகளை பதிவு செய்யவிடாமல் எதிர்ப்பாளர்கள் தடுத்துவிட்டனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என மனு அளிப்பதற்காக வந்தோம். ஆனால், சில அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்களை தடுத்துவிட்டனர். இதனை போலீஸாரும் வேடிக்கை பார்த்தனர். இந்த கருத்து கேட்புக் கூட்டம் ஒருதலைபட்சமாக நடைபெற்றுள்ளது. எனவே, அனைத்து தரப்பு மக்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்யும் வகையில் மீண்டும் கருத்துகேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x