Published : 01 Sep 2018 08:24 AM
Last Updated : 01 Sep 2018 08:24 AM

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் சித்தியடைந்தார்

கோவை மாவட்டம் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் (93) உடல்நலக் குறைவால் நேற்று சித்தியடைந்தார்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள முதலிபாளையம் சிவராமசாமி அடிகளார்-கற்பினி அம்மையார் தம்பதிகளின் மகனான இவர், 15-வது வயதில் சிரவையாதீனத்தில் தங்கியிருந்த ராமானந்த அடிகளாருக்குப் பணிவிடை செய்ததுடன், மடத்தின் பணிகளிலும் ஈடுபட்டார்.

1947-ல் மயிலம் சிவஞான பாலாய அடிகளார் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து 5 ஆண்டுகள் தனித் தமிழ்க் கல்வி பயின்றார். 1952-ல் சென்னை பல்கலைக் கழகத்தால் புலவர் பட்டம் பெற்றார். இதையடுத்து, பேரூர் ஆதீனம் ஆறுமுக அடிகளாரால் இளையபட்டமாக அறிவிக்கப்பட் டார். தொடர்ந்து கல்வி வளர்ச் சிக்கும், ஆதீன வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபட்டார். 1967-ல் குருமுதல்வராக பட்டம் சூட்டப் பட்டார்.

1951-ல் இவர் தொடங்கிய பள்ளி தற்போது கலை, அறிவியல் தமிழ்க் கல்லூரியாக உயர்ந்துள் ளது. திருமடம், சைவப்பேரவை, பல்வேறு சங்கங்கள், அமைப்பு கள், கல்லூரிகளில் பொறுப்புகளை வகித்துள்ள இவர், பல கட்டுரை கள், நூல்களையும் எழுதியுள்ளார். பல மாநாடுகளில் பங்கேற்றுள்ள இவருக்கு, சென்னை பல்கலைக் கழகம் முதுமுனைவர் பட்டம் வழங்கியுள்ளது.

உடல்நலக் குறைவால் பாதிக் கப்பட்டிருந்த சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நேற்று சித்தியடைந்தார். இவரது உடலுக்கு பல்வேறு கட்சி, அமைப்புகளைச் சேர்ந்தோர், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ராமதாஸ் இரங்கல்

கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். பேரூர் ஆதீனம் ஆன்மிகப் பணி மட்டுமின்றி, மிகச்சிறப்பாக தமிழ் பணியும் மேற்கொண்டார். கோவில் குட முழுக்குகளையும், திருமணங்களையும் தமிழ் முறைப்படி நடத்தி மாற்றத்தை ஏற்படுத்தியவர். அறநெறியும், சமயநெறியும் மாறாமல் வாழ்ந்த அவர், தீண்டாமை ஒழிப்புக்காக குரல் கொடுத்தவர்.

கொங்கு மண்டலத்தில் தமிழ்க் கல்லூரி மூலம் தமிழைப் பரப்பினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x