Published : 15 Sep 2018 08:55 PM
Last Updated : 15 Sep 2018 08:55 PM

‘இனி வாழ்ந்து என்ன பயன்?’ - செல்போனில் வந்த அழைப்புக்குப் பிறகு விரக்தியில் சென்ற வாலிபர் தற்கொலை

மார்த்தாண்டத்தில் 22 வயது வாலிபர் ஒருவர் விரக்தியில் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மார்த்தாண்டம், நந்தன்கோட்டையைச் சேர்ந்தவர் அஜய், இவர் சந்தையில் மீன்லோடு இறக்கும் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை இவர் பணியிலிருந்த போது செல்போனில் அழைப்புவர எடுத்துப் பேசியவர் அதன் பிறகு மனமுடைந்து அருகில் இருந்தவர்களிடம் அழுதுள்ளார். அவருக்கு அருகில் இருந்தவர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

பிறகு அங்கிருந்து புறப்படும் முன் ’இனி வாழ்வதில் பயனில்லை’ என்று கூறிவிட்டுச் சென்றார்.

அதன் பிறகு வீட்டுக்குச் சென்றவர் கடும் விரக்தியில் தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் எழ கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தால் அஜய் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார்.

போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர், அவருக்கு கடைசியாக வந்த அழைப்பு யாரிடம் இருந்து வந்தது, காதல் பிரச்சினையா? என்ன காரணம் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர்களிடமும் அஜயைப் பற்றிய தகவல்களை போலீஸார் கேட்டறிந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x