Published : 26 Sep 2018 09:20 AM
Last Updated : 26 Sep 2018 09:20 AM

இந்து மத விழாக்களை முடக்க தமிழக அரசு திட்டம்: பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

இந்து மத விழாக்களை முடக்க தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக முன்னோடித் தலைவ ரான தீனதயாள் உபாத்யாயாவின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு தமிழிசை உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது:

ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத் துள்ளார். தொடங்கிய முதல் நாளே இதன்மூலம் 1,000 பேர் பயனடைந்துள்ளனர். எனவே, மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய் துள்ளேன். மற்றவர்களும் பரிந் துரை செய்ய வேண்டும் என வேண்டுகிறேன்.

இந்து மத விழாக்களையும், பழக்க வழக்கங்களையும், கலாச்சாரத்தையும் முடக்கும் நோக்கத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பல ஆண்டு களாக நடந்து வரும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியது. பல இடங்களில் எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி இந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து போராட்டம் நடத்த இருக்கிறோம்.

தாமிரபரணி புஷ்கர விழாவுக்கு முக்கியமான படித்துறைகளில் தடை விதித்து, அந்த விழாவையே முடக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. ஆதீனங்கள், மடாதிபதிகளை அவமதிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடந்து வருகின்றனர். ஆகம விதிகள் பற்றி ஆதீனங்கள், மடாதிபதிகள் கூறுவதுதான் இறுதியானது. எனவே, தமிழக அரசு தனது நிலையை மாற்றிக் கொண்டு தாமிரபரணி புஷ்கர விழாவை நடத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு விழாவாகவே இதை நடத்த வேண்டும்.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x