Published : 06 Sep 2018 08:19 AM
Last Updated : 06 Sep 2018 08:19 AM

பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு மாணவி லூயிஸ் சோபியாவுக்கு போலீஸ் சம்மன்

பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியாவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்த டாக்டர் ஏ.ஏ.சாமியின் மகள் லூயிஸ் சோபியா (28). கனடாவில் உள்ள மான்ட்ரியால் பல்கலைக்கழகத்தில் கணித பாடத்தில் ஆராய்ச்சி மாணவியாக பயின்று வருகிறார்.

இவர் கடந்த 3-ம் தேதி சென்னையில் இருந்து தனியார் விமானம் மூலம் தூத்துக்குடி வந் தார். அதே விமானத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையும் வந்தார். அப்போது, சோபியா திடீ ரென ‘பாசிச பாஜக அரசு ஒழிக' என ஆவேசமாக முழக்கமிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து அவரிடம் தமிழிசை விளக்கம் கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழிசை அளித்த புகாரின் பேரில், சோபியாவை புதுக்கோட்டை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு, பின்னர் உடல்நிலை காரண மாக தூத்துக்குடி அரசு மருத் துவமனையில் சோபியா அனுமதிக் கப்பட்டார்.

பின்னர், தூத்துக்குடி 3-வது நீதித்துறை நடுவர்மன்றம் சோபி யாவுக்கு ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து நேற்று முன் தினம் மாலையில் அவர் விடு விக்கப்பட்டார். சோபியாவை போலீஸார் கைது செய்த போது, அவரிடம் இருந்த பழைய காலாவதியான பாஸ்போர்ட்டை போலீஸார் பறிமுதல் செய்தனர். எனவே, புதிய பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு நேற்று முன்தினமே போலீஸார் சம்மனை, சோபியாவின் தந்தையிடம் அளித் தனர். ஆனால், அவர் வாங்க மறுத்துவிட்டார்.

நேற்று மீண்டும் போலீஸார் சம்மன் அனுப்பினர். சோபியாவின் புதிய பாஸ்போர்ட்டை வரும் 7-ம் தேதி புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி ஒப்படைக்குமாறு சம்மன் அனுப் பப்பட்டது. இந்த சம்மனை சோபி யாவின் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.

பாசிசம் என்பது என்ன?

மாணவி லூயிஸ் சோபியா விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிடும்போது பயன்படுத்திய பாசிசம் என்ற வார்த்தையே தமிழிசை கோபமடைய காரணமாக இருந்தது.

பாசிசம் என்பது சர்வாதிகாரியின் தலைமையில், சமூக நிறுவனங்கள், பண்பாட்டு நிறுவனங்கள், பொருளாதார கொள் கைகள் ஆகியவற்றின் உதவியுடன் ஆட்சி அதிகாரவர்க்கத் தால் ஒற்றைக் கருத்தியலை சமூகத்தின் மீது திணிப்பதாகும். தேசத்தின் பெருமை, நலன், மகத்துவம், இனப்பெருமை, இனத்தின் மகத்துவம் ஆகியவையே பிரதானம். தனிமனித உரிமைகளை மதிக்காமல், நாட்டு நலனுக்காக, வளர்ச்சிக்காக எனக்கூறி அரசின் செயல்பாடு, நடவடிக்கைகளை கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் அதிகார இயந்தி ரங்கள் மூலம் நசுக்கும் அரசியல் நடைமுறையாகும். இந்த சொல், பாஸ்சியோ (Fascio) அல்லது பாஸ்சி (Fasci) என்ற இத்தாலிய சொல்லில் இருந்து உருவானது. இதன் பொருள் இறுக்கமாக கட்டப்பட்ட குச்சிகளின் கட்டு என்பதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x