Published : 25 Sep 2018 07:34 AM
Last Updated : 25 Sep 2018 07:34 AM

தமிழகம் முழுவதும் கடந்த 23 நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6 லட்சம் மனு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க இதுவரை 6.31 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித் துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகளும் அன்றே தொடங்கின. வரும் 2019 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட திருத் தங்களையும் மேற்கொள்ளலாம். ஆன்லைனிலும் விண்ணப்பிக் கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து,புதிய வாக்காளர் கள் பலர் தங்கள் விண்ணப்பங் களை அளித்துள்ளனர்.

இதற்கிடையில், அரசு, தனி யார் பணியில் இருப்பவர்களின் வசதிக்காக, தமிழகம் முழுவதும் உள்ள 67,644 வாக்குச்சாவடி களிலும் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் கட்ட முகாம்

இதன்படி, இரண்டாம் கட்ட முகாம் கடந்த 23-ம் தேதி நடந்தது. இதில், பெயர் சேர்க்க 2,94,970 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெயர் நீக்க 21,422 மனுக்கள், வசிப்பிட மாற்றத்துக்கு 34,585 மனுக்கள், தொகுதிக்குள் இடமாற் றத்துக்கு 25,950 மனுக்கள் என 3,76,937 மனுக்கள் பெறப்பட்டன.

இதுதவிர கடந்த 1-ம் தேதி தொடங்கி 22-ம் தேதிவரை, சிறப்பு முகாம்கள் இல்லாத நாட்களில், தாலுகா அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் வாயிலாக, பெயர் சேர்ப்பதற்கான 16,227 விண்ணப் பங்கள் உட்பட 29,762 விண்ணப்பங் கள் பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் பெறப்பட்ட 35,328 விண்ணப் பங்கள் உட்பட இதுவரை 8,25,260 விண்ணப்பங்கள் பெறப்பட் டுள்ளன.

இதுவரை, தமிழகத்தில் வசிக் கும் புதிய வாக்காளர்கள் 6,31,127 பேர், வெளிநாடு வாழ் தமிழர்கள் 43 பேர் என 6,31,170 பேர் பெயர் சேர்க்கவும், 51 பேர் பெயர் நீக்கவும் விண்ணப்பித் துள்ளனர்.

அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 44,933 பேர், அடுத்ததாக சென்னை யில் 43,517 பேர், திருவள்ளூரில் 33,895 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்குவதற்கு சேலத்தில் அதிக பட்சமாக 7,313 பேர் விண்ணப் பித்துள்ளனர்.

அடுத்த கட்ட சிறப்பு முகாம்கள் அக்டோபர் 7, 14 ஆகிய நாட்களில் நடக்க உள்ளன.

இத்தகவல்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x