Published : 06 Sep 2018 08:50 PM
Last Updated : 06 Sep 2018 08:50 PM

அபிராமியின் கணவருக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி: குன்றத்தூர் ஒன்றிய நிர்வாகியாக்கினார் ரஜினி

குன்றத்தூரில் ஆண் நண்பருடன் ஏற்பட்ட தொடர்பால் இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவர் விஜயை அழைத்து ஆறுதல் சொன்ன ரஜினி அவருக்கு தனது மக்கள் மன்றத்தில் பதவி வழங்கி உள்ளார்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த குன்றத்தூர் மூன்றாம் கட்டளையில் வசிக்கும் விஜய் (34). வங்கியில் பணியாற்றுகிறார். இவர் காதலித்து மணந்த மனைவி அபிராமி (28). கடந்த வாரம் பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துடன் ஏற்பட்ட தனது முறைதவறிய உறவால் பெற்ற குழந்தைகள் அஜய் (5), காருண்யா (4) பாலில் விஷம் வைத்து கொன்றார்.

தமிழகத்தையே உலுக்கிய அபிராமியின் வழக்கில் அவரது செயலை வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எந்த தாயும் செய்யத்துணியாத செயலை செய்த அபிராமியின் செயலால் அவரது கணவர் விஜய் தனது இரண்டு குழந்தைகளையும் இழந்து நிற்கிறார்.

விஜய் ரஜினியின் தீவிர ரசிகர். அவரது குழந்தைகளும் ரஜினி ரசிகர்கள். இந்நிலையில் தனது ரசிகரின் குழந்தைகள்தான் கொல்லப்பட்டது என்பது குறித்து அறிந்த ரஜினி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக நேற்று விஜயை தனது வீட்டுக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்தார்.

அவரது குடும்ப விபரங்களை கேட்டார். பின்னர் என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள் என்று கூறி ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் விஜய் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் அவருக்கு தனது ரஜினி மக்கள் மன்றத்தில் குன்றத்தூர் ஒன்றிய இளைஞர் அணி இணைச்செயலாளர் பதவியை அளித்துள்ளார் ரஜினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x