Last Updated : 06 Sep, 2018 10:11 AM

 

Published : 06 Sep 2018 10:11 AM
Last Updated : 06 Sep 2018 10:11 AM

மூதறிஞர் ராஜாஜியின் உறவினர்கள் ஆதரவோடு சாதனை படைக்கும் தொரப்பள்ளி கிராம அரசுப்பள்ளி: தலைமை ஆசிரியையின் ஓராண்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு

மூதறிஞர் ராஜாஜியின் உறவினர் கள் ஆதரவோடு இயங்கி வரும் தொரப்பள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை சீதாலட்சுமியின் வழி காட்டுதலில், கடந்த ஓராண்டில் மட்டும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் மாணவ, மாணவிகள் பல்வேறு சாதனை களைப் படைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது தொரப்பள்ளி அக்ர ஹாரம் கிராமம். இது மூதறிஞர் ராஜாஜி பிறந்த ஊர். இக்கிராமத்தில் 2005-ல் அரசு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. 2010-ல் இது நடுநிலைப்பள்ளியாகவும், 2011-ல் உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

இப்பள்ளியில், பேரண்டப் பள்ளி, கொல்லப்பள்ளி, நாயன கொண்டப் பள்ளி, அக்ரஹாரம், ராஜபுரம் மற்றும் தொரப்பள்ளி கிராமங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக் காக, மூதறிஞர் ராஜாஜியின் உறவினர்கள், அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளியில் 2015-க்கு முன்பு வரை மாணவர் களின் கல்வி திறன் மட்டுமே மேம்படுத்தப்பட்டு வந்தது. விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவர்களுக்கு ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப் படவில்லை.

இந்நிலையில், 2016-ல் பள்ளி யின் தலைமையாசிரியராக சு.சீதா லட்சுமி பொறுப்பேற்றுக் கொண் டார். இதனைத் தொடர்ந்து வீடு, பள்ளி என இருந்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கமளித்து, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க ஆசிரியர்கள் உதவியுடன் பயிற்சி அளித்து வருகிறார்.

இதன் பயனாக, இப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அறிவி யல் நாடகம், அறிவியல் நகரம் பிரிவில் மாநில அளவில் வெற்றி பெற்று உள்ளனர். இதே போல், மாவட்ட அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளில் தான் பணியாற்றிய அனைத்துப் பள்ளி களிலும் பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறுகிறார் தலைமையாசியர் சீதாலட்சுமி. இது குறித்து அவர் மேலும் கூறும்போது, ‘‘2016-க்கு முன்பு வரை மாணவர் சேர்க்கை 179-ஆக இருந்தது. தீவிர மாணவர் சேர்க்கை விழிப் புணர்வின் பயனாக, தற்போது 250 பேர் இந்தப் பள்ளியில் பயின்று வருகின்றனர். நிகழாண்டில் தனி யார் பங்களிப்புடன் மாணவர்களுக் கான விளையாட்டு உபகரணங்கள் பெற்று, அளிக்கப்பட்ட பயிற்சியின் மூலம் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவர்களுக்கு கல்வியுடன், தனித்திறன்களை வளர்க்க வேண்டும் என்ற நோக் கில், அளிக்கப்பட்ட பயிற்சியின் மூலம் 9 மாணவ, மாணவிகள் அரசின் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று, ஊக்கத்தொகை பெற்று வருகின்றனர். பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன கணினி அறை, சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் இயந்திரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. நீதி போதனை வகுப்புகள், பேச்சாற் றல், எழுத்தாற்றல், கைத்தொழில், இசை, ஓவியம், விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இதற்கு ராஜாஜியின் உறவினர் சுதா ஜனார்த்தன் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள சில தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஊக்கமும், பள்ளிக்குத் தேவை யான வசதிகளையும் தந்து உதவு கின்றனர். எதிர்காலத்தில் அனைத்து போட்டியிலும் எங்கள் பள்ளி மாணவர்கள் தேசிய, மாநில அளவில் சாதனை படைப்பார்கள்’’ என்று பெருமையுடன் தெரிவித் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x