Published : 16 Sep 2018 09:44 AM
Last Updated : 16 Sep 2018 09:44 AM

பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும்; பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை நடக்கும்: மதிப்பெண் 1,200-ல் இருந்து 600 ஆகிறது- அமைச்சர் அறிவிப்பு

 

பிளஸ் 1 தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் போதும். பிளஸ் 2 பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரி வித்துள்ளார்.

 

பள்ளிக்கல்வித் துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களை நீட், ஜெஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கான கையேடு வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கையேடு களை வெளியிட்டார். தொடர்ந்து, செயற்கைக் கோள் வழியிலான பயிற்சி திட்டத்தையும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறியது:

 

10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என தொடர்ந்து 3 பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவதால், மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும் அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டு கோள் வைக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று, புதிய அரசாணை பிறப் பிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, பிளஸ் 2 தேர்வின் மொத்த மதிப்பெண் 1,200-ல் இருந்து 600 ஆக குறைக்கப் பட்டுள்ளது.

 

உயர்கல்வியில் சேரவேண்டு மானால், பிளஸ் 1 தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் மட்டுமே உயர்கல்வி மாண வர் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

 

பிளஸ் 1 தேர்வில் மாண வர்கள் முழுமையாக தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் பிளஸ் 2 படிக்க அனுமதிக் கப்படுவர். அந்த காலகட்டத் தில், அவர்கள் தேர்ச்சி அடையாத பாடங்களில் தேர்வு எழுதி வெற்றிபெற வாய்ப்பு வழங்கப்படும்.

 

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரு பொதுத் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இரு வகுப்பு களுக்கும் தனித்தனியே தலா 600 மதிப்பெண்களுக்கு ‘மதிப்பெண் சான்றிதழ்’ வழங்கப்படும்.

 

பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டு, பிளஸ் 2 வகுப்பின் இறுதியில், ‘மதிப்பெண் பட்டியல்’ வழங்கப்படும்.

 

கடந்த ஆண்டு 72 ஆயிரம் மாண வர்கள் நீட் பயிற்சியில் பங்கேற்ற னர். இந்த ஆண்டு தற்போது 22 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

2017-ம் ஆண்டு 72 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் எழுதினர். எதிர்காலத்தில் மாணவர்கள் வெளி மாநிலத்துக்கு சென்று நீட் தேர்வு எழுதவேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு செய்யும்.

 

மாணவர்களை நீட், ஜெஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துவதற்காக, 32 மாவட் டங்களில் இருந்து 320 ஆசிரியர் களுக்கு கடந்த மாதம் மாநில அள விலான பயிற்சி அளிக்கப்பட்டுள் ளது. அதேபோல மாநிலம் முழு வதும் உள்ள 413 ஒன்றியங்களில் இருந்து 4,130 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

 

பிளஸ் 1 வகுப்பில் இருந்தே மாணவர்கள் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டும் என்ற நோக்கில், ஒன்றியத்துக்கு 20 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது நவீன முறையில் பயிற்சி தொடங்கப் பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

 

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ் வர முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x