Published : 19 Sep 2018 09:51 AM
Last Updated : 19 Sep 2018 09:51 AM

வயலின் மேதை டி.என்.கிருஷ்ணனின் விருது மகுடத்தில் ஒரு வைரக் கல்: குடியரசு துணைத் தலைவரிடம் வாழ்நாள் சாதனை விருது பெற்றார்

‘சங்கீத கலாநிதி’, ‘சங்கீத நாடக அகாடமி விருது’, ‘பத்மஸ்ரீ’, ‘பத்மவிபூஷண்’ என பல விருதுகளைப் பெற்ற வயலின் மேதை டி.என்.கிருஷ் ணனுக்கு சமீபத்தில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப் பட்டுள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட கலைப் பொக்கிஷங்களின் மகத்து வத்தை அடுத்தடுத்த தலைமுறை களுக்கும் உணரச் செய்யும் வித மாக, இத்துறையில் சாதனை படைக்கும் கலைஞர்களுக்கு ‘லெஜண்ட்ஸ் ஆஃப் இந்தியா’ அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. 2002-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப் படுகிறது.

இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, பிரபல வயலின் வித்வான் டி.என்.கிருஷ் ணன், புகழ்பெற்ற ஓவியரும் சிற்பி யுமான சதீஷ் குஜ்ரால், நாடக இயக்குநர் ரத்தன் தியாம் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள் ளது. டெல்லியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதுகளைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

‘‘டி.என்.கிருஷ்ணன், சதீஷ் குஜ்ரால், ரத்தன் தியாம் ஆகிய மூவரும் தங்கள் துறையில் சிறப் பாக மிளிர்ந்ததோடு, இந் தியக் கலைக்கு சர்வதேச அங்கீகா ரம் கிடைக்கச் செய்ததில் முக்கிய மானவர்கள். அவர்களைப் பாராட்டி விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்’’ என்று புகழாரம் சூட்டிய வெங்கய்ய நாயுடு, ‘‘நமது பாரம்பரியக் கலைகள், கலாச்சாரம், பண்பாட்டை பரப்பு வதற்கான முயற்சியில் மாநில அரசுகளும், தனியார் நிறுவனங் களும் ஈடுபட வேண்டும். நமது கலை, கலாச்சாரத்தின் தொன் மையை, அருமையை அடுத்த தலைமுறைக்கு தகுந்த முறையில் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது’’ என்றார். விருது பெற்ற மூவருக்கும் அங்கவஸ்திரம் அணிவித்து, பாராட்டுப் பட்டயம், ரொக்கப் பரிசு வழங்கி கவுர வித்தார்.

வாழ்நாள் சாதனையாளர்கள்

டி.என்.கிருஷ்ணன்: 1928-ல் பிறந்தவர் டி.என்.கிருஷ்ணன். மழலை மேதையாக 5 வயதி லேயே வயலின் வாசிக்கத் தொடங் கினார். மிகச் சிறிய வயதிலேயே அரியக்குடி ராமானுஜ அய்யங் கார், முசிறி சுப்பிரமணிய அய்யர், ஆலத்தூர் சகோதரர்கள், செம்பை வைத்யநாத பாகவதர், எம்.டி.ராம நாதன், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் ஆகியோருக்கு பக்கவாத்தி யம் வாசித்தவர். சென்னை இசைக் கல்லூரியில் பேராசிரியராகவும் டெல்லி பல்கலைக்கழகத்தின் இசை, நுண்கலைப் பள்ளியின் தலைவராகவும் பணியாற்றியவர். சென்னை மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதை 1980-ல் பெற்றவர். சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலா சிகாமணி, பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் விருதுகளையும் பெற்றவர். சக கலைஞர்களால் ‘புரொஃபஸர்’ என மரியாதையோடு அழைக்கப்படுபவர்.

சதீஷ் குஜ்ரால்: பிரபல சிற்பியும், ஓவியருமான சதீஷ் குஜ்ராலின் படைப்புகள் உலகின் பல நகரங்களில் இந்திய சிற்பக் கலையின் உன்னதத்தைப் பறை சாற்றியது. சிறந்த கட்டிடக் கலைஞராகவும் புகழ்பெற்றவர். டெல்லியில் கட்டப்பட்டுள்ள பெல்ஜியம் தூதரக கட்டிடத்தை வடிவமைத்தவர். உலக அளவில் 20-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறந்த கட்டுமானத்தைக் கொண்ட கட்டிடங்களில் ஒன்று இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x