Published : 24 Sep 2014 11:31 AM
Last Updated : 24 Sep 2014 11:31 AM

அரசு வேலை வாய்ப்பு முகாம்: மாற்றுத்திறனாளிகள் 123 பேர் தேர்வு

தமிழகத்தில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நிலையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 123 நபர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிலையம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இதன்படி, தமிழகத்தில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நிலையத்தில் நடந்தது.

இந்த வேலைவாய்ப்பு முகா மின் தொடக்க நிகழ்ச்சியில் மாநில மாற்றுத்திறனாளிகள் துறையின் ஆணையர் கே. மணிவண்ணன், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நிலையத்தின் இணை இயக்குநர் ஜி. தங்கராஜ், தேசிய ஊனமு ற்றோர் நிதி உதவி மற்றும் வளர்ச்சிக் கழக செயலர் ஆர். கே. மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வேலை வாய்ப்பு முகாமில் 21 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த நிறுவனங்கள் தங்களின் நிறுவனத்துக்கு தேவையான துறைகளுக்கு ஏற்ப மாற்றுத்திறனாளிகளை பணிகளுக்கு தேர்வு செய்து கொண்டன. முகாமில் பட்டதாரி கள் மற்றும் எழுத படிக்க தெரியாதவர்கள் என மொத்தம் 323 பேர் கலந்து கொண்டனர்.

எழுத படிக்க தெரியாதவர் களில் முதற்கட்டமாக 10 பேருக்கு சுயதொழில் புரிய ரூ. 3 லட்சம் பிரித்து வழங்கப்பட்டது. இதனை தேசிய ஊனமுற்றோர் நிதி உதவி மற்றும் வளர்ச்சிக் கழக செயலர் ஆர்.கே. மிஸ்ரா வழங்கினார். நிறுவனங்களில் நேர்முக தேர்வில் கலந்து கொண்டவர்களில் 123 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. பணி கிடைத்த மாற்றுத்திறனாளி களுக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை தகுதிக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தொடக்க நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தின் இணை இயக்குநர் ஜி. தங்கராஜ் பேசுகையில், ''இந்த வேலை வாய்ப்பு முகாமில் மையத்தில் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் மட்டும் அழைக்கப்பட்டுள் ளனர். நிறுவனங்களில் பணி கிடைத்த மாற்றுத்திறனா ளிகள் நலன் குறித்து மையத்தின் மூலம் கண்காணிக்கப்படும். அரசின் அனைத்து நலத்திட்டங்களும் வேலை கிடைத்தவர்களுக்கு வழங்கப்படும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x