Published : 02 Jun 2019 12:00 AM
Last Updated : 02 Jun 2019 12:00 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக மீண்டும் விஸ்வரூபம்: ஊராட்சி சபைக் கூட்டத்தில் மக்களை சந்தித்ததற்கு கைமேல் பலன்

திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றதன் மூலம் திமுக மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் திமுக 4-கிலும் அதிமுக 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. திமுக துணை பொதுச் செயலாளர் இ.பெரியசாமி ஆத்தூரிலும், திமுக கொறடா அர.சக்கரபாணி ஒட்டன்சத்திரத்திலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர்.

கடந்த முறை வலுவான வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதனை அதிமுக தலைமை ஆத்தூரில் நிறுத்தியும் இ.பெரியசாமியை வெல்ல முடியவில்லை. ஒட்டன்சத்திரம் தொகுதியில் கடந்த 5 தேர்தல்களில் ஒவ்வொரு முறையும் அதிமுக தலைமை வேட்பாளர்களை மாற்றியும் அர. சக்கரபாணியை வெல்ல முடியவில்லை. திமுகவின் பலம்கடந்த பேரவைத் தேர்தலில் கூடுதலாகப் பழநி, நத்தம் தொகுதியை திமுக கைப்பற்றியது. 2016 சட்டப் பேரவை தேர்த லுக்குப் பிறகு சோர்வில் இருந்த திமுகவினரை உற்சாகப்படுத்த அக்கட்சித் தலைமை அதிக முயற்சி செய்தது. உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் திமுகவினர் பலரும் கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை இ.பெரியசாமியின் வழிநடத்தலால் கோஷ்டி இன்றி திமுக பலமாக உள்ளது.

திமுக எம்எல்ஏ.க்கள் அர.சக்கரபாணி, இ.பெ.செந்தில்குமார், ஆண்டிஅம்பலம் ஆகி யோர் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கிராமம்தோறும் ஊராட்சி சபைக் கூட்டத்தை கூட்டி மக்களை சந்தித்தது வர வேற்பைப் பெற்றது. மற்ற தொகுதிகளில் கட்சியின் நிர்வாகிகள் மக்களை சந்தித்தனர்.

குறைகளை நிறைவேற்றுகிறார் களோ இல்லையோ, தேர்தல் காலத்தில் மட்டுமின்றி பிற நேரங்களிலும் தங்களைத் தேடி வருகிறார்களே என மக்கள் மத்தியில் ஏற்பட்ட எண்ணம் திமுக வுக்குச் சாதகமாக அமைந்தது. இதன் பலனாக தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் அதாவது 5 லட்சத்து 38 ஆயிரத்து 972 வாக்குகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் மக்களவை திமுக வேட்பாளர் ப.வேலுச்சாமி வெற்றி பெற்றார். ஆத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,26,994 வாக்குகள், நத்தம் தொகுதியில் 1,04710 வாக்குகள், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 98,588 வாக்குகள், பழநி தொகுதியில் 92,083 வாக்குகள், நிலக்கோட்டை தொகுதியில் 31,282 வாக்குகள் என அதிமுகவைவிட அதிக வாக்குகள் வித்தியாசம் காட்டமுடிந்தது.

கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டப் பேரவை தொகுதியில் தம்பித்துரையை விட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 62 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதபோதும் தொண்டர்களை சோர்வடையாமல் மாவட்ட திமுக பார்த்துக் கொண்டது. இது திமுகவின் எழுச்சியாகவே பார்க்கப் படுகிறது. மக்களவைத் தேர்தல் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள திமுகவினரை, உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக்கி வருகிறது மாவட்ட திமுக தலைமை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x