Published : 26 Jun 2019 02:42 PM
Last Updated : 26 Jun 2019 02:42 PM

வரும் 28 -ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

வரும் 28 ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக, அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 2 ஆம் தேதி கூடியது. இதையடுத்து, ஆளுநர் உரை மீதான விவாதம் ஜனவரி 4 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. பின்னர், பிப்ரவரி 8 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம், பிப்ரவரி 11 முதல் 14 வரை நடைபெற்றது. அதன் பிறகு, சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்னும் நடைபெறவில்லை.

இந்நிலையில், வரும் 28 ஆம் தேதி, காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடுவதாக, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். பல முக்கியமான விவாதங்கள் இந்தக் கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அன்றைய தினம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி  ஆகியோர் தலைமையில், தலைமைக் கழகத்தில் வரும் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது", என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x