Published : 26 Jun 2019 08:52 AM
Last Updated : 26 Jun 2019 08:52 AM

நாடு முழுவதும் புதிதாக 10 அணு உலைகள் அமைக்க அனுமதி: அணு விஞ்ஞானி ஆர்.சிதம்பரம் தகவல்

இந்தியாவில் புதிதாக 10 அணு உலைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான நிதி யும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அணு விஞ்ஞானி ஆர்.சிதம்பரம் தெரிவித்தார்.

சென்னை தரமணி சிஐடி வளாகத் தில் அமைந்துள்ள மின்னணு பரி மாற்றம் மற்றும் பாதுகாப்பு நிறு வனத்தின் (எஸ்இடிஎஸ்) 18-வது ஆண்டுவிழா நேற்று கொண்டாடப் பட்டது.

இதில், மத்திய அரசின் முன்னாள் முதன்மை அறிவியல் ஆலோசக ரும், பாபா அணுஆராய்ச்சி மையத் தின் பாபா இருக்கை தலைவருமான அணு விஞ்ஞானி ஆர்.சிதம்பரம் கலந்துகொண்டார். ‘இணைய பாது காப்பில் எஸ்இடிஎஸ் நிறுவனத்தின் பங்கு’ என்ற தலைப்பில் அவர் நிறுவன நாள் உரை நிகழ்த்தினார்.

சைபர் கிரைம் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை பணி யிலும், தகவல் தொகுப்புகளை பாதுகாப்பதிலும் எஸ்இடிஎஸ் நிறுவனம் ஆற்றிவரும் பணிகளை அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசக ரும், எஸ்இடிஎஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவருமான கே.விஜய்ராகவன், சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, எஸ்இடிஎஸ் நிறுவன ஆட்சிக்குழு தலைவர் என்.சீதாராம், பெங்களூரு வில் உள்ள இந்திய அறிவியல் கழக விஞ்ஞானி சி.இ.வெனி மாதவன் ஆகியோரும் பேசினர்.

முன்னதாக, செயல் இயக்குநர் என்.சரத் சந்திரபாபு வரவேற்றார். நிறைவாக, தலைமை நிர்வாக அலுவலர் எஸ்.கே.ஐயர் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர் களிடம் அணு விஞ்ஞானி சிதம்பரம் கூறியதாவது:

பருவநிலை மாற்றத்தால் ஏற் படும் சவால்களை எதிர்கொள் வதற்கு அணுசக்தி மிகவும் முக்கிய மானது. அணு உலைகளை கை விட்ட சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தற்போது அணு உலை களை மீண்டும் நிர்மாணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்தியாவில் புதிதாக 10 அணு உலைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 10 அணு உலைகள் மூலம் 700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்ப தால் எந்த பாதிப்பும் வராது. மக்கள் பயப்படத் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந் திரம் முழு பாதுகாப்பானதா?’’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரம் நன்கு மேம்படுத்தப்பட்ட, பாது காப்பு அம்சங்கள் நிறைந்த இயந்தி ரம். இதை மத்திய அரசு நிறுவன மான பெல் நிறுவனம் தயாரிக்கிறது. அதில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x